பாவப்பட்ட பணத்தில் – 963 ரூபா­வைக் காணோம்!!

வடக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வின் வீட்­டில் போடப்­பட்ட பணப் பொதி­யில் 6 ஆயி­ரத்து 37 ரூபாவே இருந்­தது என்று யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்­காக வழங்­கப் பட்ட 7,000 ரூபா பணத்­தைத் திருப்­பித் தர வேண்­டும் என்று சபை அமர்­வில் வடக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் கோரி­யி­ருந்­தார்.

அதை­ய­டுத்­துக் கிழக்­குப் பல்­க­லைக் கழக மாண­வர்­கள் பொது­மக்­க­ளி­டம் ஒரு ரூபா வீதம் சேக­ரித்து நேற்று யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்­த­னர்.

வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வ­ரைச் சந்­திக்க முடி­யா­த­தால் அவ­ரது வீட்டு வாச­லில் பணப் பொதி­யைக் கட்­டி­விட்­டுச் சென்­ற­னர்.

வீட்­டில் பாது­காப்­புக்கு இருந்த பொலி­ஸார் இது தொடர்­பில் யாழ்ப்­பா­ணம் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­த­னர். அவர்­கள் வந்து பொதியை மீட்டு ஆராய்ந்­த­னர்.

அந்­தப் பொதி­யைக் கணக்­கிட்­ட­ போது 6 ஆயி­ரத்து 37 ரூபா மாத்­தி­ரமே இருந்­தது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close