பிரதமர் ரணில்- வடக்குக்கு இருநாள் பயணம்!!

அரச தலை­வர் தேர்­தல் களம் சூடு­பித்­துள்ள நிலை­யில், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க  இன்று வவு­னி­யா­வுக்கு வர­வுள்­ளார். அவ­ரு­டன்  ஐ.தே.க வின் அமைச்­சர் குழு­வி­ன­ரும் வர­வுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இரு­நாள் பய­ண­மாக வடக்கு மாகா­ணத்­துக்கு வரும் அவர் இன்று வவு­னி­யா­வி­லும், நாளை யாழ்ப்­பா­ணத்­தி­லும் பல திட்­டங்­களை ஆரம்­பித்து வைக்­கக்­க­வுள்­ளார்.

வவு­னி­யா­வுக்கு வரும் தலைமை அமைச்­சர், வவு­னியா மருத்­து­வ­மனை­யில் இரண்­டா­வது சுகா­தா­ரத் துறை மேம்­ப­டுத்­தல் அபி­வி­ருத்தி திட்­டத்­தின்கீழ் உரு­வாக்­கப்­பட்ட விபத்து மற்­றும் அவ­சர சிகிச்­சைப் பிரிவை மக்­கள் பயன்­பாட்­டுக்கு கைய­ளிக்­க­வுள்­ளார்.

அத்­து­டன் நெதர்­லாந்து அர­சால் வழங்­கப்­ப­ட­வுள்ள, இல­குக் கடன் உத­வி­யில் அமைக்­கப்­ப­ட­வுள்ள இரு­தய மற்­றும் சிறு­நீ­ரக சிகிச்சை பிரி­வுக்­கான அடிக்­கல்­லை­யும் நட­வுள்­ளார்.

இந்த நிகழ்­வு­க­ளில் சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்­தின, நெதர்­லாந்­துத் துணைத் தூது­வர் ஈவா வான்­வோ­சம், வடக்கு மாகாண ஆளு­னர் சுரேன் ராக­வன் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கலந்து கொள்­ள­வுள்­ள­னர்.

தலைமை அமைச்­சர் வரு­வ­தை­யிட்டு வவு­னியா மருத்­து­வ­னைக்கு அரு­கில் உள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளின் தக­வல்­கள் மற்­றும் அதன் உரி­மை­யா­ளர், பணி­பு­ரி­ப­வர்­க­ளது தக­வல்­கள் பெறும் நட­வ­டிக்கை நேற்று சிவில் உடை தரித்த பொலி­சா­ரால் மேற்­கொள்ள பட்­டி­ருந்­தன.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை யாழ்ப்­பா­ணத்­துக்­கும் வர­வுள்­ளார். யாழ்ப்­பா­ணத்­துக்கு வரும் அவர் யாழ்ப்­பா­ணத்­தி­லும் பல அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை ஆரம்­பிக்­க­வுள்­ளார்.

வீட்­டுத் திட்­டங்­க­ளைக் கைய­ளிக்­கும் அவர் மயி­லிட்­டி­யில் அமைக்­கப்­பட்ட துறை­மு­கத்­தைத் மக்­க­ளு­டைய பாவ­னைக்­குக் கைய­ளிப்­பார். இந்­திய நிதி­யு­த­வில் அமைக்­கப்­பட்­டு­வ­ரும் யாழ்ப்­பா­ணக் கலா­சார மண்­ட­பத்­தின் கட்­டு­மா­னப் பணி­க­ளை­யும் அவர் பார்­வை­யி­டு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like