பிரதேச சபை உறுப்பினரை நீக்கிய­மைக்கு- நீதி­மன்று தடை­யுத்­த­ரவு!!

0 9

தமிழ் அர­சுக் கட்­சி­யின் வலி. தெற்கு பிர­தே­ச­ச­பை­யின் உறுப்­பி­னர் ஜி.பிர­காஷை உள்­ளூ­ராட்சி உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கி­ய­தற்கு எதி­ராக யாழ்ப்­பாண மாவட்ட நீதி­மன்­றம் இடைக்­கா­லத் தடை விதித்­துள்­ளது.

தமிழ் அர­சுக்­கட்­சி­யில் இருந்து நீக்­கப்­பட்ட ஜி.பிர­காஷ் சார்­பில், தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி வி.மணி­வண்­ணன் நேற்று யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றில் முன்­னி­லை­யா­னார் .

வலி தெற்கு பிர­தே­ச­ச­பைத் தவி­சா­ளர் தெரி­வில் கட்சி கட்­டுப்­பா­டு­களை மீறி ஜி.பிர­காஷ் நடந்து கொண்­டி­ருந்­தார். கட்­சி­யின் அறி­வு­றுத்­தலை மீறி தவி­சா­ளர் பத­விக்கு போட்­டி­யிட்­டார். இதை­ய­டுத்து, அவர் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அவ­ரி­டம் விளக்­க­மும் கோரப்­பட்­டது.

எனி­னும், அவர் போதிய விளக்­க­ம­ளிக்­க­வில்­லை­யெ­னக் கூறி, கடந்த வாரம் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார். இதற்­கான கடி­தம் கட்­சிச் செய­லா­ள­ரால் அவ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து, தேர்­தல் ஆணை­ய­கத்­தால், உள்­ளூ­ராட்சி உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டும் கடி­த­மும் அனுப்பி வைக்­கப்­பட்­டது. தன்­னைக் கட்­சி­யி­லி­ருந்­தும், உள்­ளூ­ராட்சி உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்­தும் நீக்­கி­ய­தற்கு எதி­ராக, ஜி.பிர­காஷ் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதி­மன்­றில் வழக்கு தாக்­கல் செய்­தார்.

அவர் சார்­பில் சட்­டத்­த­ரணி வி.மணி­வண்­ணன் முன்­னி­லை­யா­கி­னார். தமிழ் அர­சுக்­கட்­சி­யின் தலை­வர் மாவை சேனா­தி­ராசா, கட்­சி­யின் செய­லா­ளர் கி.துரை­ரா­ச­சிங்­கம், பொரு­ளா­ளர் பொ.கன­க­ச­பா­பதி ஆகி­யோர் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­னர்.

உத­வித் தேர்­தல் ஆணை­யா­ள­ரால் பிர­கா­ஷூக்கு அனுப்­பப்­பட்ட கடி­தத்­தில் திகதி குறிப்­பி­டப்­ப­டா­மல் அனுப்­பப்­பட்­ட­தை­யும் மன்­றில் மணி­வண்­ணன் சுட்­டிக்­காட்­டி­னார்.

வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொண்ட நீதி­மன்­றம், எதிர் வரும் 25ஆம் திகதி வழக்­கைத் தவ­ணை­யிட்­ட­து­டன், அது­வரை பிர­காஷின் உறுப்­பு­ரிமை நீக்­கத்­திற்கு இடைக்­கா­லத் தடை விதித்­துள்­ளது.

You might also like