side Add

புத்தாண்டில் புதியன பொலியட்டும்!!

ஆங்­கில நாட்­காட்­டி­யின்­படி இன்று புதிய வரு­டம் பிறக்­கின்­றது. நடை­மு­றை­யில் புதிய அரச நிதி­யாண்­டும் இன்றே பிறப்­ப­தால் பெரும்­பா­லான புதிய ஆண்­டுக் கரு­மங்­கள் அனைத்­தும் இன்றே தொடங்­கு­கின்­றன. தை பிறந்­தால் வழி பிறக்­கும் என்­கிற தமிழ் முது­மொ­ழிக்­குப் பழக்­கப்­பட்­டு­விட்­ட­வர்­க­ளான நாம் எதிர்­பார்ப்­பு­க­ளோ­டும் நம்­பிக்­கை­க­ளோ­டும் இந்த ஆண்­டை­யும் வர­வேற்­ப­தற்­குத் தயா­ரா­கி­விட்­டோம்.

தமி­ழர்­க­ளின் அர­சி­யல் எதிர்­பார்ப்­பு­கள் பிள்­ளை­யார் கலி­யா­ணம் போல ஒவ்­வொரு ஆண்­டும் நீடித்­துக்­கொண்டே செல்­கி­றது. இன்­னும் ஒரு தீர்வை எட்­டு­வ­தா­கக் காணோம். அதற்­காக நம்­பிக்­கை­யை­யும் முயற்­சி­யை­யும் கைவிட்­டு­விட முடி­யாதே! வாழ்க்­கைச் சக்­க­ரத்­தில் விடா­மு­யற்­சியே வெற்­றி­யைத் தரும் என்­பது அர­சி­ய­லி­லும் பொருந்­தும்.

இருப்­பி­னும் பழையன கழி­த­லைப் போன்று கடந்து செல்­லும் ஆண்­டில் நமது அர­சி­யல் நகர்­வு­க­ளை­யும் அவற்­றின் விளை­வு­க­ளை­யும் சீர்­தூக்­கிப் பார்ப்­ப­தும் அதன் பட்­ட­றி­வில் இந்த ஆண்­டி­னைத் திட்­ட­மி­டு­வ­தும் அவ­சி­யம்.

2015ஆம் ஆண்டு தை மாதம் ஏற்­பட்ட அர­சி­யல் மாற்­றம் வர­லாற்­றில் என்­று­மில்­லா­த­தாக இருந்­தது என்­ப­தால் அது இலங்­கை­யின் அர­சி­ய­லைப் புரட்­டிப்­போட்டுப் புதிய பாதை­யில் அதனை வழி­ந­டத்­திச் செல்­லும் என்­கிற எதிர்­பார்ப்­பும் நம்­பிக்­கை­யும் அந்­தப் புத்­தாண்­டில் நிரம்பி வழிந்­தது.

இரு பெரும் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் சேர்ந்து அமைத்த கூட்டு அர­சின் ஊடா­கத் தமி­ழர்­க­ளின் தலை­யாய பிரச்­சி­னைக்கு ஒரு முடிவு எட்­டப்­ப­டும் என்ற நம்­பிக்கை இலங்­கை­யைத் தாண்டி ஏனைய நாடு­க­ளி­லும் விர­வி­யி­ருந்­தது. கட்சி மோதல்­க­ளுக்கு அப்­பால் இரு தரப்­பு­க­ளும் ஒன்­றி­ணைந்­து­விட்­ட­த­னால், புதிய அர­ச­மைப்பு ஊடாக தீர்­வுக்­கான அடித்­த­ளம் ஒன்று எட்­டப்­ப­டும் என்­கிற எதிர்­பார்ப்­பும் நிறை­யவே இருந்­தது.

ஆனால், அவை எல்­லாம் இன்று நிறை­வே­றாத கானல் நீரா­கி­விட்­டன. எதனை முன்­வைத்து 2015 அர­சி­யல் மாற்­றம் நிகழ்ந்­ததோ அந்த நோக்­கத்தை, இலக்­கைத் தலை­கீ­ழாக மாற்­றி­வி­டும் மாற்­றத்தை ஐப்­பசி 26ஆம் நாள் மாற்­றம் நிகழ்த்­தி­விட்டு மறைந்­து­விட்­டது.

அந்த அர­சி­யல் குழப்­பத்­தில் இருந்து இலங்­கை­யைக் காப்­பாற்­று­வ­தற்கு எடுக்­கப்­பட்ட நகர்­வு­க­ளில் தமி­ழர் தரப்­பும் மிக முக்­கிய பங்­கா­ளி­யாக இருந்­தது. மக்­க­ளாட்­சியை மீட்­டெ­டுப்­ப­தற்­கான போராட்­ட­மா­கச் சித்­த­ரிக்­கப்­பட்ட இந்த நகர்­வு­க­ளின் மூலம் தமி­ழர்­கள் எதைப் பெறப்­போ­கி­றார்­கள் என்­ப­தைக் காலம்­தான் தீர்­மா­னிக்க வேண்­டும்.

இருந்­தா­லும் அந்த நகர்­வு­க­ளின் பலா­ப­லன்­கள் இந்த ஆண்­டில் தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மாக இருக்­க­வேண்­டும் என்­கிற எதிர்­பார்ப்­பும் வேண்­டு­கை­யும் தமி­ழர்­கள் மனங்­க­ளில் தணி­யா­மல் இருக்­கின்­றது. எடுத்­துக் கொண்ட காரி­யத்தை முடிப்­ப­தற்­காக மீண்­டும் எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்­கிற கோரிக்­கை­யோடு இந்த ஆண்­டில் தமிழ்த் தலை­வர்­கள் தங்­கள் முன் வந்து நிற்­கக்­கூ­டாது என்று தமி­ழர்­கள் எதிர்­பார்க்­கி­றார்­கள்.

அதற்­கேற்ற புத்­தி­சா­து­ரி­யத்­து­ட­னும் புது­மை­யு­ட­னும் தலை­வர்­கள் நடந்­து­கொள்­ள­வேண்­டும் என்­பது புத்­தாண்­டில் தமி­ழர்­க­ளின் எதிர்­பார்ப்பு. பிறந்­தி­ருக்­கும் புதிய ஆண்டு பல தேர்­தல்­களை எதிர்­கொள்­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளைக் கொண்­டி­ருப்­ப­தால் பல அர­சி­யல் நகர்­வு­க­ளை­யும் வித்­தை­க­ளை­யும் மக்­கள் காண­வேண்­டி­யி­ருக்­கும். அதற்கு மத்­தி­யில் நிரந்­த­ர­மான அமை­தியை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஓர் அர­சி­யல் தீர்­வுக்­கான எதிர்­பார்ப்­போடு, அபி­வி­ருத்­தி­யும், இயல்பு வாழ்­வுக்­கான மீளு­கை­யும் இந்த ஆண்­டில் கிட்­ட­வேண்­டும் என்று பிராத்­திப்­போ­மாக!

You might also like