பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்- ஆளுநர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

வடக்கு மாகா­ணக் கல்­வித்­து­றை­யில் பெண்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெ­றும் பாலி­யல் ரீதி­யான துன்­பு­றுத்­தல் களை விசா­ரணை செய்­வ­தற்கு குறை­கேள் விசா­ர­ணைக் குழுவை அமைக்க வடக்கு மாகாண ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன் தீர்­மா­னித் துள்­ளார்.

வடக்கு மாகா­ணத்­தின் கல்­வித்­து­றை­யில் பணி­பு­ரி­யும் பெண்­கள் பாலி­யல் ரீதி­யில் துன்­பு­றுத்­தப்­ப­டு­வது தொடர்­பி­லும் பால்­நிலை சமத்­து­வம் இல்­லாமை தொடர்­பி­லும் ஆளு­ந­ரின் கவ­னத்­துக்கு அதி­க­ள­வான முறைப்­பா­டு­கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வ­தை­ய­டுத்து இது தொடர்­பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அவற்­றுக்கு தீர்­வு­களை வழங்­கு­வ­தற்கு குறை­கேள் விசா­ர­ணைக் குழுவை நிறுவ ஆளு­நர் தீர்­மா­னித்­துள்­ளார் என்று ஆளு­நர் அலு­வ­ல­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மூன்று பேர­டங்­கிய இந்த விசா­ர­ணைக் குழு­வில் இரு பெண்­கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்­ள­து­டன் அதில் ஒரு­வர் முறைப்­பாட்­டா­ளர்­க­ளால் முன்­மொ­ழி­யப்­பட்­ட­வ­ரா­க­வும் இருப்­பார்.

இதே­வேளை வடக்கு மாகா­ணத்­தின் கல்­வித்­து­றையை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் வடக்கு மாகாண கல்­வி­ய­மைச்­சுக்கு தமது ஆலோ­ச­னை­க­ளை­யும் சரி­யான வழி­காட்­டு­தல்­க­ளை­யும் வழங்­கு­வ­தற்கு 15 பேர­டங்­கிய மூத்த கல்­வி­மான் சபையை நிறு­வு­வ­தற்­கும் ஆளு­நர் தீர்­மா­னித்­துள்­ளார்.

இந்­தச் சபைக்­கான உறுப்­பி­னர்­களை நிய­மிப்­ப­தற்கு ஆளு­நர் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார் என்று அந்­தச் செய்­தி­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

You might also like