side Add

பெண் இனத்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்குவோம்

மிக அண்­மை­யில், ஏறக்­கு­றைய ஆயி­ரம் பேர் வரை­யில் கலந்து கொண்ட திரு­மண விழா­வொன்­றில் நானும் பங்கு கொள்ள நேர்ந்­தது. திரு­ம­ணச் சடங்­கு­கள் முறைப்­படி இடம்­பெற்­றன.

இனிதே திரு­ம­ணம் முடிந்­தது. விழா­வுக்கு இரு­மணி நேரம் பிந்தி வந்­த­தால், பின் வரி­சை­யில் இடம்­பி­டித்து அமர வேண்டி நேர்ந்த தரப்­பி­னர்­கள், மண­மக்­க­ளுக்கு அறு­க­ரிசி இடு­வ­தற்­காக முட்டி மோதி வரி­சை­யில் இருந்­த­வர்­க­ளெல்­லோ­ரை­யும் முந்­திச் சென்று முன்­பு­றத்­தில் நின்­றார்­கள்.

அந்த வரி­சை­யில் வௌிநாட்­ட­வர், இளஞ்­சோ­டி­கள், ஆண்­கள் எனப் பல­ரும் இடம்­பெற்­றி­ருந்­த­னர். திரு­ம­ணத்­துக்கு ஆரம்­பித்­தி­லேயே வந்து முன்­வ­ரி­சை­யில் இருந்­த­வர்­க­ளில் பெரும்­பா­லோர் பெண்­கள் என்­ப­த­னால் வரி­சை­யில், நீண்ட நேரம் நிற்க நேர்ந்­த­தால் முணு­மு­ணுத்­த­னர்.

‘‘ஆண்­கள் போட்ட பின்­னர்­தான் பெண்­கள் அறு­க­ரிசி போட­வேண்­டும். அடக்­கம் உள்ள பெண்­கள் என்­றால் ஆறு­த­லாக பின்­வ­ரி­சை­யில் நின்று போட­வும்’’ என்று தூர நோக்­கில்­லாத சில பெண்­க­ளும், இளை­ஞர்­க­ளும், ஆணா­திக்க சிந்­தனை கொண்ட ஒரு சில­ரும் கூறி­னர்.

தமி­ழர்­க­ளது பண்­டைக்­கால புராண இதி­கா­சங்­க­ளி­லும் கூட அவ்­வி­தம் ஆண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கும் வழக்­கம் இடம்­பெற்­ற­தாக ஆதா­ர­மில்லை.

இவ்­வா­றி­ருக்க, பிள்ளை பரா­ம­ரிப்பு, வீட்டு நிர்­வா­கம், உணவு தயா­ரிப்பு, அலு­வ­ல­கம் எனப் பல பணி­க­ளைச் செய்­யும் பெண்­க­ளும், பிந்தி வீடு சென்­றால் என்ன நிலை? வாச­லில் வைத்தே ஏன் வர இவ்­வ­ளவு தாம­தம்? எனக் கேட்­கும் ஆண்­கள் கூட, திரு­மண வைப­வத்­தில் மண­மக்­க­ளுக்கு அறு­க­ரிசி போட்டு ஆசீர்­வ­திக்க தமது மனை­வி­மா­ருக்கு அந்த வாய்ப்பை முத­லில் வழங்க மன­தொப்பி முன்­வ­ரு­வ­தில்லை. இந்த நிலை மாற­வேண்­டும்.

வைப­வத்­துக்கு உரிய நேரம் வந்து, வரி­சை­யில் இருப்­பது எவ­ரென்­றா­லும் சரி மண­மக்­களை ஆசீர்­வ­திக்க எழுந்து சென்று அறு­க­ரிசி போட­லாம்.

இது­தான் தர்­மம். சபை­யில் பெண்­கள் எழுந்து முன்­னுக்கு அறு­க­ரிசி போடு­வது என நினைப்­ப­வர்­கள், மங்­க­ல­க­ர­மான நிகழ்­வு­க­ளில் கலந்து கொள்­வோரை மட்­டந்­தட்­டிப் பேசு­ப­வர்­கள், பார­பட்­ச­மான முறை­யில் உப­ச­ரிப்­ப­வர்­கள் சமய நூல்­க­ளின்­படி, மன­தில் அழுக்­காறு, பொறாமை கொண்­ட­வர்­கள். அறு­க­ரிசி போடத் தகு­தி­யற்­ற­வர்­கள்.

ஆகவே நல்ல மணம் படைத்த மூத்­தோர், சன்­றோர், பெண்­கள், ஆண்­கள், தள்­ளாத வய­தி­னர் கூட வழங்­கும் வாழ்த்­தி­னால் மண­மக்­க­ளுக்கு உச்­சப் பயன் உண்டு.

எல்­லோ­ரை­யும் மதித்து, இனிய வார்த்தை கூறி, உப­ச­ரித்து நன்றி கூறி அனுப்­பு­வ­து­தான் மிகப்­பெ­ரிய திரு­மண விழா­வுக்­கான குறி­காட்டி ஆகும்.

எனவே ஆணா­திக்­கச் சிந்­த­னையை மனங்­க­ளி­லி­ருந்து அகற்றி, பெண் இனத்­த­வர்­களை மதிப்பு மரி­யா­தை­யு­டன் நடத்த மனங்­கொள்­வோம்.

You might also like
X