பெரிய மடுக்குளத்தில் -தமிழ் மீனவர்களுக்கு அனுமதி!!

மன்னார் ஈச்சளவாக்கை மற்றும் சன்னார் பகுதிகளைச் சேர்ந்த நன்னீர் மீன் பிடியில் பல வருடங்களாக ஈடுபட்ட தமிழ் மீனவர்களுக்கு, நீண்ட போராட்டத்தின் பின்னர் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


போரில் இடம்பெயர்ந்து மீள் குடியேறி சுமார் 10 வருடங்கள் கடந்த நிலையில் ஈச்சளவாக்கை மற்றும் சன்னார் மீனவர்கள் பெரிய மடு குளத்தில் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டனர்.

இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் வவுனியா நீரியல் வள திணைக்களத்தின் ஊடாக நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் பெரிய மடு குளத்தில் மீன்பிடிப்பதற்கு சகோதர இன மீனவர்களால் மறுப்புத் தெரிவித்தனர்.

மீனவர்களின் கடும் போராட்டத்தின் பயனாக, சுமார் ஆறு மாதங்களின் பின்னர் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You might also like