side Add

பேருந்தில் ஒரு கிலோ கஞ்சாவுடன் – மூவர் கைது!!

வவுனியா தலைமை பொலிஸ்நிலய போதைதடுப்பு பிரிவினரால் ஒரு கிலோ நிறையுடைய கேரளா கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டது.

அதனை உடமையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தை, வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வைத்து வழிமறித்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சந்தேக நபர்கள் கஞ்சாவினை தமது ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்திச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டனர்.

You might also like