பொங்கலுக்கு இடையூறு- பொலிஸாருடன் மக்கள் முறுகல்!!

முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று 108 பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்காக அடுப்புகளை ஒழுங்கமைப்பு செய்யும் போது, அடுப்புகளை பிக்கு அத்து மீறி குடியிருக்கும் கட்டடத்தை அண்மித்து வைக்க வேண்டாம் என்று பொலிஸார் தடையிட்டுள்ளனர்.

அடுப்புகளை கோவிலுக்கு வெளியே வீதியில் வைத்து பொங்குமாறும் பொலிஸார் மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் நிகழ்வைக் குழப்பம் விதமாகப் பொலிஸார் செயற்படுவதாக அடியவர்கள் மிகுந்த வேதனையோடு தெரிவித்துள்ளனர்.

இதனால் அடியவர்கள் கோவிலுக்கு வெளியில் வீதியின் இரு மருங்கும் பொங்கலை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

You might also like