பொறிக்குள் சிக்கியுள்ள கோத்தபாய!!

போரை வழி நடத்­தி­ய­வர் என்ற வகை­யில் போர்க் குற்­றங்­க­ளுக்கு முன்­னாள் பாது­காப்­புச் செய­ல­ரான கோத்­த­பா­யவே பொறுப்­புக் கூற வேண்­டு­மெ­னப் பன்­னாட்டு சட்ட நிபு­ண­ரான ஸ்கொட் கில்­மோர் தெரி­வித்­துள்­ளமை பன்­னாட்டு அள­வில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக் கூடி­யது. இறு­திப்­போ­ரின் போதும் அதன் பின்­ன­ரும் இலங்­கை­யில் போர்க் குற்­றங்­களே இடம்­பெ­ற­வில்­லை­யெ­னக் கூறப்­பட்டு வரும் நிலை­யில் போர்க் குற்­றம் தொடர்­பான இந்­தக் கருத்து வௌியா­கி­யுள்­ளது.

பாதிக்­கப்­பட்­டோர் குற்­றச்­சாட்டு
இறு­திப் போரின் போதும் அதன் பின்­ன­ரும் படை­யி­னர் போர்க் குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­தற்­கான ஆதா­ரங்­கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளால் ஆதா­ர­பூர்­வ­மாக வௌியி­டப்­பட்­டன. ஆனால் இவை போலி­யா­ன­வை­யென இலங்­கைத் தரப்­பால் மறுத்­து­ரைக்­கப்­ப­டு­கின்­றது. போர்க்­குற்­றங்­கள் இடம்­பெற்­றன என்று கூறப்­ப­டும் காலப்­ப­கு­தி­யில் மகிந்த ராஜ­பக்ச அரச தலை­வ­ரா­க­வும் கோத்­த­பாய பாது­காப்­புச் செய­ல­ரா­க­வும் பதவி வகித்­துள்­ள­னர். படை­க­ளைத் தனது முழுக் கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­தி­ருந்த கோத்­த­பாய படை நட­வ­டிக்­கை­கள் சக­ல­துக்­கும் பொறுப்­பாக இருந்­துள்­ளார்.

அது­மட்­டு­மல்­லாது அந்­தக் காலத்­தின் போது ஆள்­கள் கடத்­திச் செல்­லப்­பட்டு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­டுக் கொலை செய்­யப்­ப­டு­வது சாதா­ர­ண­மா­கவே இடம்­பெற்­றது. அர­சுக்கு எதி­ரா­கக் கருத்­துத் தெரி­வித்த பலர் கடத்­திச் செல்­லப்­பட்ட நிலை­யில் காணா­மல் ஆக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­க­ளின் கதி என்ன என்­பது தொடர்­பாக இது­வ­ரை­யில் எது­வுமே தெரி­ய­வில்லை. அர­சுக்கு எதி­ரான செய்­தி­களை வௌ ியிட்ட ஊட­க­வி­யர்­க­ளும் கோத்­த­பாய பதவி வகித்­த­போது கொல்­லப்­பட்­டுள்­ள­னர். ஆனால் அப்­போ­தைய அரசு இவை தொடர்­பா­கக் கவ­னத்­தில் கொள்­ள­வே­யில்லை. அரசு இயந்­தி­ரம் தவ­றா­கச் செயற்­பட்­டதை இது தெளி­வாக எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

கோத்­தா­வுக்கு பொறி
ஆனால் இவற்­றை­யெல்­லாம் மறந்­து­விட்டு கோத்­த­பாய நாட்­டின் அரச தலை­வ­ரா­கும் வகை­யில் வியூ­கங்­களை வகுத்­தார். தாமே அரச தலை­வர் வேட்­பா­ளர் என­வும் வெளிப்­ப­டை­யா­கக் கூறி வரு­கின்­றார். இதற்கு அமெ­ரிக்­கக் குடி­யு­ரிமை தடை­யாக இருந்­தது. இதை நீக்­கு­வ­தற்­குத் தேவை­யான ஆவ­ணங்­களை அமெ­ரிக்க இரா­ஜ­தந்­திர திணைக்­க­ளத்­தி­டம் ஒப்­ப­டைத்த அவர் இறுதி முடி­வொன்றை எட்­டு­வ­தற்­காக அமெ­ரிக்கா சென்­றார். அவரை வீழ்த்தி விடு­வ­தற்­கான பொறி­யொன்று அங்கு தயா­ராக இருந்­ததை அவர் அறிந்­தி­ருக்­க­வில்லை.

தற்­போது கன­டா­வில் வசிக்­கும் றோய் சமா­தா­னம் என்­னும் இலங்­கைத் தமி­ழர் தாம் இலங்­கை­யில் கைது செய்­யப்­பட்­டுத் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­போது சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தா­க­வும் அதற்­குத் தமக்கு நட்­ட­ஈடு வழங்க வேண்­டு­மெ­ன­வும் தெரி­வித்து அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார்.

தாம் சித்­தி­ர­வ­தை­களை அனு­ப­வித்­த­மைக்கு கோத்­த­பா­யவே கார­ண­மாக இருந்­துள்­ள­ரெ­ன­வும் அவர் இந்த வழக்­கில் தெரி­வித்­துள்­ளார். இந்த வழக்கை பிர­பல பன்­னாட்டு சட்ட நிபு­ண­ரான ஸ்கொட் கில்­மோர் பொறுப்­பேற்று நடத்­து­கின்­றார். இந்த வழக்­கைத் தவிர பிர­பல ஊட­க­வி­ய­லா­ளர் லசந்த விக்­கி­ர­ம­துங்­க­வின் மக­ளும் கோத்­த­பா­ய­வுக்கு எதி­ராக வழக்­கொன்றை அமெ­ரிக்­கா­வில் தாக்­கல் செய்­துள்­ளார். தமது தந்­தை­யின் கொலை­யு­டன் கோத்­த­பா­ய­வுக்­குத் தொடர்­பி­ருந்­த­தா­கத் தெரி­வித்தே அவர் இந்த வழக்­கைத் தாக்­கல் செய்­துள்­ளார்.

அமெ­ரிக்கா சென்­றி­ருந்த கோத்­த­பாய இவற்­றை­யெல்­லாம் எதிர்­பார்த்­தி­ருக்க மாட்­டார். நீதி­மன்ற அழைப்­பாணை அவ­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­ட­தால் இந்த வழக்­கு­க­ளி­லி­ருந்து அவ­ரால் தப்­பிக்­கவே முடி­யாது. இதை­விட லண்­ட­னி­லும் இவ­ருக்­கெ­தி­ராக நூற்­றுக் கணக்­கான வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னால் அரச தலை­வர் தேர்­த­லில் இவர் போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மாக வேறு ஒரு­வ­ரைத் தெரிவு செய்ய வேண்­டிய கட்­டா­யத்­துக்­குள் மகிந்த அணி­யி­னர் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

மகிந்­த­வுக்கு வாய்ப்­பா­க­லாம்
சிங்­கள இன­வா­தி­கள் கோத்­த­பாய விட­யத்­தைக் கையில் தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்டு தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­வார்­க­ளென்­பதை எதிர்­பார்க்க முடி­யும். மகிந்­த­வுக்­கும் இது­வொரு நல்ல வாய்ப்­பா­கவே அமைந்­து­வி­டும். கோத்­த­பாய அரச தலை­வ­ராக வரு­வ­தில் அவ­ருக்கு பூரண விருப்­பம் இருப்­ப­தாக எண்­ணி­விட முடி­யாது. ஏனென்­றால் கோத்­த­பா­யவை அவர் முழு­தாக நம்­பு­வ­தில்லை. இந்த நிலை­யில் கோத்­த­பா­ய­வுக்­குப் பதி­லாக வேறொ­ரு­வ­ரைக் கள­மி­றக்­கு­வ­தையே அவர் விரும்­பு­வார்.

இதே­வேளை லசந்த விக்­கி­ரம துங்­க­வின் கொலைக்கு இழப்­பீடு கோரி கோத்­த­பா­ய­வுக்கு எதி­ராக லசந்­த­வின் மக­ளால் அமெ­ரிக்க நீதி­மன்­ற­ மொன்­றில் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்கு விசா­ர­ணைக்கு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதில் கோத்­த­பாய குற்­ற­வா­ளி ­யென்­பது நிரூ­பிக்­கப்­பட்­டால் பெரிய தொகை­யொன்றை அவர் இழப்­பீ­டாக வழங்­க­வேண்­டும். அவ்­வா­றில்­லா­து­விட்­டால் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க நேரி­டும். அத்­து­டன் வழக்கு நிலு­வை­யில் உள்ள நிலை­யில் அவ­ரது குடி­யு­ரி­மையை அமெ­ரிக்கா நீக்­கு­மென எதிர்­பார்க்­க­வும் முடி­யாது.

றோய் சமா­தா­னம் இலங்­கைக்கு வந்து சரத்­பொன்­சோ­க­வு­டன் ஆலோ­சித்த பின்­னரே வழக்­கைத் தாக்­கல் செய்­த­தா­கக் கூறப்­ப­டும் நிலை­யில் இந்த வழக்கு விசா­ர­ணை­யின் போது போன்­சேகா கோத்­த­பா­ய­வுக்கு எதி­ரா­கச் சாட்­சி­யம் அளித்­தா­லும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை.

சக­ல­தை­யும் தொகுத்­துப்­பார்க்­கும்­போது கோத்­த­பாய மீள முடி­யா­ன­தொரு பொறிக்­குள் சிக்­கி­யுள்­ளமை தௌிவா­கத் தெரி­கின்­றது.

You might also like