போதைப்­பொ­ருள் கடத்­தலை தடுக்­கச் சிறப்­புச் செய­லணி!!

யாழ்ப்­பா­ணத்­தில் போதைப் பொருள் கடத்­தல், விற்­பனையை முற்­றாக ஒழிப்­ப­தற்கு சிறப்­புப் பொலிஸ் செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ் மா அதி­பர் றொஷான் பெர்­ணான்­டோ­வால் இந்­தச் செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தச் செய­ல­ணி­யின் நட­வ­டிக்­கை­கள் யாழ்ப்­பா­ணத்­தில் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன. விழிப்­பு­ணர்­வுச் சுவ­ரொட்­டி­கள் குடா­நாட்­டின் அனைத்து பொலிஸ் நிலை­யங்­கள் ஊடா­க­வும் ஒட்­டப்­ப­ட­வுள்­ளன.

யாழ்ப்­பா­ணத்­தில் மாவா போதைப் பொருள், போதைக் குளி­கை­கள், ஹெரா­யின், கஞ்சா போதைப் பொருள் விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது. அவற்றை விற்­பனை செய்­வோ­ருக்­கும், பொலி­ஸா­ருக்­கும் இடையே தொடர்பு உண்டு என்று வடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதி­ப­ருக்­குப் பல முறைப்­பா­டு­கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவை தொடர்­பாக விசா­ர­ணை­கள் நடத்­தப்­ப­டு­கின்­றது. யாழ்ப்­பா­ணத்­தில் போதைப் பொருள்­க­ளின் கடத்­தல், விற்­ப­னையை முற்­றாக ஒழிக்க சிறப்­புப் பொலிஸ் செய­ல­ணியை மாகாண மூத்த பிர­திப் பொலிஸ் மா அதி­பர் நிய­மித்­துள்­ளார். இந்­தச் செய­ல­ணிக்கு பொது­மக்­கள் தமது முறைப்­பா­டு­களை 0766093030 என்ற அலை­பேசி இலக்­கத்­தின் ஊடாக வழங்க முடி­யும்.

முறை­பாடு செய்­வோ­ரின் இர­க­சி­யத் தன்மை பாது­காக்­கப்­ப­டும். இந்­தச் செயற்­றிட்­டத்­துக்கு அனை­வ­ரும் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close