side Add

போர்க் குற்றங்கள் தொடர்பில்- பன்னாட்டு விசாரணை அவசியம்- சுமந்திரன் எம்.பி.!!

தமிழ் மக்­க­ளுக்கு இலங்­கை­யின் சட்­டம் பக்­கச்­சார்பாக அமை­வ­தா­லேயே பன்­னாட்டு விசா­ரணை அவ­சி­யம் என்­ப­தில் நாங்­கள் தெளி­வா­க­வுள்­ளோம் என்று தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன்.

போர்க் குற்­றங்­க­ளில் ஈடு­பட்ட தரப்­பொன்று எவ்­வாறு நீதி­யான விசா­ர­ணைக்­காக நடு­வ­ரா­கச் செயற்­பட முடி­யும்? என்­றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பி­னார்.

இது­வ­ரை­கா­ல­மும் கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றை­யூ­டாகப் போர்க் குற்ற விசா­ரணை இடம்­பெற வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­வந்த சுமந்­தி­ரன் தற்­போது தனது நிலைப்­பாட்டை மாற்­றி­யுள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார் அவர்.

லசந்த விக்­க­ர­ம­துங்க, எக்­னெ­லி­கொட உள்­ளிட்ட இரண்டு மூன்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளின் படு­கொ­லை­கள் பற்­றியே பேசப்­ப­டு­கி­றது. கடந்த மூன்று வரு­டங்­க­ளாக இவ்­வாறு பேசிக்­கொண்­டு­தான் இருக்­கி­றது அரசு. ஆனால், ஒன்­றும் செய்­யப்­ப­ட­வில்லை. குற்­றச்­செ­யல்­களை மறைப்­ப­தன் மூலம் கடந்த அர­சு­டன் நீங்­க­ளும் ஒத்­துச்­செல்­கின்­றீர்­கள்.

கடந்த இரண்டு நாள்­க­ளாக இலங்­கை­யின் நீதித்­து­றை­யின் சுயா­தீ­னம் பற்­றிப் பேசி­னார்­கள். ஒக்­டோ­பர் ஆட்­சிக் கவிழ்ப்பு தொடர்­பில் நீதி­மன்­றம் சுயா­தீ­ன­மாக செயற்­பட்­ட­மைக்­காக நாங்­கள் பாராட்­டு­க­ளைத் தெரி­வித்­துள்­ளோம். ஐ.தே.கவுக்­கும், சு.கவுக்­கும் இடை­யில் ஏற்­ப­டும் முரண்­பா­டு­க­ளுக்கு இவ்­வாறு சுயா­தீ­ன­மான தீர்ப்­பு­கள் சில சந்­தர்ப்­பங்­க­ளில் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் போர்க்­குற்ற விவ­கா­ரம் என்­பது வேறு.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளின் படு­கொ­லை­கள், காணா­மல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பில் சில விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் தொடர்­பில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­கள் என்ன?. எத்­தனை தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கொல்­லப்­பட்­டுள்­ள­னர்.

1999ஆம் ஆண்­டுக்­கும் 2009ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 9 தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கொல்;லப்­பட்­டுள்­ள­னர். இவர்­கள் தொடர்­பில் ஒரு விசா­ர­ணை­யா­வது இடம்­பெற்­றுள்­ளதா?. இவை அனைத்­தும் பார­பட்­ச­மா­கவே இடம்­பெ­று­கின்­றன. தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் தொடர்­பில் விசா­ரணை செய்­வ­தற்கு விருப்­பம் இல்லை என்­பதே உண்மை. இவ்­வா­றான பின்­பு­லத்­தில் பன்­னாட்டு விசா­ரணை ஏன் அவ­சி­ய­மென கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றீர்­கள்.

நேற்­று­முன்­தி­னம் (கடந்த செவ்­வாய்க்­கி­ழமை) உரை­யாற்­றி­யி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அருந்­திக்க பெர்­ணாண்டோ போரின் போது போர்க்­குற்­றங்­கள் இடம்­பெ­று­வது சாதா­ர­ண­மான விட­யம் என்று கூறி­யி­ருந்­தார். மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் உறுப்­பி­னர் விமல் ரத்­நா­யக்க உள்­நாட்டு விசா­ரணை போது­மென கூறி­னார்.

குறைந்­த­பட்­சம் போர்க்­குற்­றங்­கள் இடம்­பெற்­றுள்­ள­மை­யை­யும், அதற்கு உள்­நாட்டு விசா­ரணை போதும் என்­றும் 9 ஆண்­டு­க­ளுக்கு பின்­னர் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­னர். அத­னால்­தான் பன்­னாட்டு மத்­தி­யஸ்­தத்­து­டன் கூடிய விசா­ர­ணையை கோரு­கின்­றோம்.

உள்­நாட்­டில் இடம்­பெற்ற அர­சி­யல் சூழ்ச்­சி­யின் போது நீதித்­துறை நடந்­து­கொண்ட விதம் வேறு. ஆனால், ஓர் ஆயு­தக் குழு­வுக்கு எதி­ராக போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­பட்­டு­விட்டு அது குறித்த விசா­ர­ணை­க­ளில் இலங்கை அரசு நடு­வ­ராக இருக்க முடி­யுமா?. அந்த பிணக்­கு­க­ளின் பகு­தி­யா­ள­ரால் நீதி­யான விசா­ர­ணையை நடத்த முடி­யுமா?.

பன்­னாட்டு ரீதி­யில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள மன­த­வு­ரிமை மீறல் தொடர்­பி­லான குற்­றங்­க­ளுக்கு தண்­டனை வழங்­கும் சட்­டங்­கள் எமது நாட்­டில் இல்லை. இலங்­கை­யில் போரில் இடம்­பெற்­றவை பன்­னாட்­டுக் குற்­றங்­க­ளா­கும். நாக­ரீ­க­மான தேசிய சன­ச­மூ­கங்­க­ளால் அவை அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

உல­கில் ஓர் ஒதுக்­கப்­பட்ட தீவாக நாம் இருக்க முடி­யாது. அனைத்து நாடு­க­ளு­ட­னும் இணைந்து உற­வு­களை கட்­டி­யெ­ழுப்பி ஒத்­துப்­போக வேண்­டும். இறைமை என்­றால் என்­ன­வென்று முத­லில் நாட்டு மக்­க­ளுக்கு தெளி­வுப்­ப­டுத்த வேண்­டும். உல­கில் இலங்­கை­யும் ஒரு­ப­குதி என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும்.

அதே­வேளை, போர்க்­குற்­றங்­கள் இரண்டு பக்­கத்­தி­லும் இடம்­பெற்­றுள்­ளன. இதனை நான் தெரி­வித்­தால் தமிழ் மக்­க­ளி­டம் எதிர்ப்­பு­க­ளைச் சம்­பா­திக்க நேரி­டும். என்­றா­லும், சொல்ல வேண்­டிய கடப்­பாடு உள்­ளது. விடு­த­லைப் புலி­க­ளும் போர்க் குற்­றங்­க­ளைச் செய்­துள்­ள­னர்.

இறு­திப் போரின்­போது எவ்­வித போர்க்­குற்­றங்­க­ளும் இடம்­பெ­ற­வில்லை. எந்­த­வொரு பன்­னாட்டு விசா­ர­ணைக்­கும் தயா­ராக உள்­ளோம் என்று அப்­போ­தைய இரா­ணு­வத் தள­ப­தி­யா­க­வி­ருந்த சரத் பொன்­சேகா கூறு­கி­றார். எனின் நீங்­கள் ஏன் அச்­ச­ம­டை­கின்­றீர்­கள்?. ஆகவே, முன்­னெ­டுக்­க­வுள்ள விசா­ரணை பன்­னாட்டு மத்­தி­யஸ்­தத்­து­டன் கூடிய விசா­ர­ணை­யா­க­தான் இருக்க வேண்­டும்.

உள்­ளக விசா­ரணை சுயா­தீ­ன­மாக அமை­யாது. நான் இலங்­கை­யின் இறை­மைக்கு எதி­ரா­ன­வன் அல்ல. ஆனால், அடிப்­படை சுதந்­தி­ரத்­திற்­கும், மனி­த­வு­ரி­மை­க­ளுக்­கும் மதிப்­ப­ளித்து செயற்­பட வேண்­டும்.

காசா­வில் இடம்­பெற்ற தாக்­கு­தல் சம்­ப­வம் தொடர்­பில் விசா­ரணை குழு­வொன்று அமைக்­கப்­பட்­ட­போது இலங்­கை­யில் இருந்து ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­டார். அதே­போல் ஏனைய நாடு­க­ளில் இடம்­பெற்ற குற்­றங்­கள் தொடர்­பில் விசா­ர­ணைக்­காக அமைக்­கப்­பட்ட குழுக்­க­ளில் நாம் பங்­கேற்­றுள்­ளோம்.

ஆனால், இங்கு பன்­னாட்டு விசா­ரணை என்­றால் கூச்­ச­லி­டு­கின்­றோம்.
தற்­போ­தைய அரசு கடந்த அரசை குற்­றம் சாட்­டு­கி­றது. ஆனால், தற்­போது நான்கு வரு­டங்­கள் கடந்­து­விட்­டன. போதிய அவ­கா­சம் கொடுக்­கப்­பட்­டு­விட்­டது. ஆட்­சி­மாற்­றத்­துக்­காக ஊழல் – மோச­டி­கள் தொடர்­பில் பார­தூ­ர­மா­கப் பேசி­னீர்­கள்.

ஆனால், அதற்­காக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் என்ன?. ஆட்­சி­யில் இருக்­கும் போது ஒன்­றை­யும், ஆட்­சி­யில் இல்­லாத போது ஒன்­றை­யும் பேசு­கி­றீர்­கள். அதா­வது இந்­தப் பக்­கம் இருக்­கும்­போது அந்­தப் பக்­கம் பற்றி பேசு­வீர்­கள். அந்­தப் பக்­கம் இருக்­கும் போது இந்­தப்­பக்­கம் பற்றி பேசு­வீர்­கள். இவை வெறும் கண்­து­டைப்பு மாத்­தி­ரமே. வெறும் சத்­தம் மாத்­தி­ரமே. இது இரண்டு தரப்­புக்­கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு.

பன்­னாட்­டுக் குற்­றங்­களை எந்­த­வி­த­மான பொறி­மு­றைக்­குள்­ளும் உள்­வாங்க முடி­யாது. இரண்­டாம் உல­கப் போhருக்­குப் பின்­னர் பன்­னாட்டு ரீதி­யில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட குற்­றங்­களை இழைத்­த­னர் என்று சிலர் ஐரோப்­பிய நீதி­மன்­றங்­க­ளில் குற்­றஞ்­சாட்­டப்­ப­ட­னர்.

எனவே, மனி­த­வு­ரிமை மீறில்­க­ளுக்கு முறை­யான பன்­னாட்­டுச் சட்­டங்­கள் உள்­ளன. தொடர்ந்து நாட்டு மக்­களை முட்­டாள்­க­ளாக்க முடி­யாது. உண்­மையை எதிர்­கொள்­வ­தில் பிரச்­சினை இல்லை. ஆனால், அதனை மறைப்­பது குற்­ற­மா­கும் – என்­றார்.

You might also like