போர் மேகம்- கலையுமா?

இந்­தி­யா­வுக்­கும், பாகிஸ்­தா­னுக்­கு­மி­டையே மீண்­டு­மொரு போர் மூளு­மா­னால் அதன் விளை­வு­கள் மிக மோச­மா­க­ அ­மை­யு­மென எதிர்­பார்க்க முடி­யும்.

பரம எதி­ரி­க­ளாக நீண்ட கால­மா­கவே இந்த நாடு­கள் காணப்­ப­டு­கின்­றன. தொடர்ந்து இடம்­பெற்ற மதக் கல­வ­ல­ரங்­கள் கார­ண­மாக முஸ்­லிம் மக்­க­ளுக்­கெ­னப் பாகிஸ்­தான் நாடு உரு­வா­னது. ஓர் உப கண்­ட­மென அழைக்­கப்­பட்ட இந்­தி­யா­வின் ஒரு பகுதி நிலப் பரப்­பி­லேயே பாகிஸ்­தான் என்ற பெய­ரில் புதி­ய­தொரு நாடு உரு­வா­னது.

ஆனால் அந்த நாட்­டுக்­கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டையே ஆரம்­பத்­தி­லி­ருந்தே சுமூ­க­மான உற­வு­முறை காணப்­ப­ட­வில்லை. இந்­தி­யா­வில் வாழ்­கின்ற மக்­க­ளில் 80 வீத­மா­ன­வர்­கள் இந்து மதத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளா­க­வுள்­ள­னர். முஸ்­லிம் மக்­க­ளும் இந்­தி­யா­வில் வாழ்­கின்­ற­னர். ஆனால் இந்­துக்­க­ளுக்­கும் முஸ்­லிம்­க ­ளுக்­கு ­மி­டையே சுமு­க­மான உற­வு­நிலை காணப்­ப­டு­வ­தா­கக் கூறி­வி­ட­ மு­டி­யாது. இந்த இரண்டு பிரி­வி­னர்­க­ ளுக்­கு­மி­டை யில் அடிக்­கடி மோதல்­க­ளும் இடம்­பெற்று வரு­கின்­றன.

குழப்­பத்­துக்குக் குறை­வில்லை
பாகிஸ்­தான் உரு­வான நாள் முதல் குழப்­பங்­க­ளுக்கு அங்கு குறை­வி­ருந்­த ­தில்லை. அர­சி­யல் குழப்­பங்­க­ளும் ஆட்­சிக் கவிழ்ப்­பு­க­ளும் அந்த நாட்­டின் வாடிக்­கை­யான விட­யங்­க­ளாக மாறி­விட்­டன. அரசியலில் இரா­ணு­வத்­தி­னர் ஆதிக்­கம் செலுத்­து­கின்ற நிலை­யும் அங்கு காணப்­ப­டு­கின்­றது.

அது­மட்­டு­மல்­லாமல் இரா­ணு­வத்­தில் உயர் பத­வி­களை வகித்த சிலர் ஆட்­சி­யில் அமர்ந்­து­கொண்ட வர­லா­றும் அங்கு உண்டு. அத்­து­டன் பயங்­க­ர­வாத இயக்­கங்­க­ளுக்­கும் அங்கு குறை­வில்லை. பாகிஸ்­தான் அர­சின் ஆசீர்­வா­தம் கிடைப்­ப­தால் இந்த இயக்­கங்­கள் பலம் பெற்­ற­ன­வா­கக் காணப்­ப­டு­கின்­றன. அண்டை நாடு­க­ளான இந்­தி­யா­விலும் ஆப்­கா­னிஸ்­தா­னி­லும் இடம் பெ­று­கின்ற பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு இந்த இயக்­கங்­களே பொறுப்­பா­க­வுள்­ளன.

அண்­மை­யில் இந்­தி­யா­வின் காஷ்­மீர் பகு­திக்­குள் ஊடு­ரு­விய பய­ங்க­ர­வா­தி­க­ளின் தாக்­கு­த­லில் நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட இந்தியச் சிப்பாய்கள் கொல்­லப்­பட்­டமை இந்­தி­யா­வின் ஆத்­தி­ரத்­தைக் கிள­றி­விட்­டது. இதன் கார­ண­மா­கவே பாகிஸ்­தா­னின் பகு­திக்­குள் அமைந்­தி­ருந்த பயங்­க­ர­வா­தி­க­ளின் முகாம்­க­ ளின்­மீது இந்­திய போர் வானூர்திகள் குண்­டுத் தாக்­கு­தலை மேற்­கொண்­டன.

பதி­லடி
இதில் அந்த முகாம்­கள் அழிக்­கப்­பட்­ட­தோடு முந்­நூ­றுக்­கும் மேற்­பட்ட பயங்­க­ர­வா­தி­கள் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் இந்­தியா தெரி­வித்­தது. இந்­தி­யா­வின் இந்த நட­வ­டிக்­கைக்கு பாகிஸ்­தான் தரப்­பி­லி­ருந்து கடு­மை­யான கண்­ட­னம் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தி­யா­வுக்­குப் பதி­லடி வழங்­கப்­ப­டு­மெ­ன­வும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்த நிலை­யில்­தான் இந்­தி­யா­வின் இரண்டு போர் வானூர்­தி­ க­ளைத் தாம் சுட்டு வீழ்த்­தி­ய­தா­கப் பாகிஸ்­தான் தெரி­வித்­தது. அவற்­றில் இருந்த விமா­னி­க­ளில் ஒரு­வர் உயி­ரி­ழந்து விட்­ட­தா­க­வும் இன்னொருவர் சிறை­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் இரண்டு நாடுகளுக்­கி­டையே போர்ப் பதற்­றத்தை அதி­க­ரித்­துள்­ளது.

எதிர்ப்­பும், ஆத­ர­வும்
இதே­வேளை பாகிஸ்­தான் தலைமை அமைச்­சர் இம்­ரான்­கான் தமது நாட்­டின் அணு­வா­யுத நிபு­ணர்­க­ளு­டன் நீண்ட பேச்­சில் ஈடு­பட்­ட­தா­கத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. இந்­தி­யா­வும் பாகிஸ்­தா­னும் அணு­வா­யு­தங்­க­ளைக் கொண்டிருப்­ப­தால் இந்­தப் பேச்சு முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றது.

இந்த நிலை­யில் சீனா வழக்­கம்­போன்று இந்­திய நட­வ­டிக்கைக்கு அதி­ருப்தி வெளி­யிட்­டுள்ள நிலை­யில் அமெ­ரிக்கா இந்­தி­யா­வுக்கு ஆத­ர­வான கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளது. தனது நாட்­டின் பாது­காப்­புக்­குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­வ­தற்கு இந்­தி­யா­வுக்கு முழு உரி­மை­யும் உள்­ளது என்று தெரி­வித்­துள்ள அமெ­ரிக்கா பாகிஸ்­தா­னில் செயற்­ப­டு­கின்ற தீவி­ர­வா­தக் குழுக்­களை அழிப்­ப­தற்கு இந்­தி­யா­வுக்கு உத­வு­வ­தற்கு அமெ­ரிக்கா தயா­ரா­க­வி­ருப்பதாகவும் தெரி­வித்­துள்­ளது.

படை பலத்­தி­லும் பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் தனக்­குப் போட்­டி­யாக எழுந்துள்ள சீனா பாகிஸ்­தா­னுக்­குச் சார்­பாக நடந்­து­கொள்­வதை அமெ­ரிக்கா ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்­ளக்­போ­வ­தில்லை என்­ப­தையே இது எடுத்­துக் காட்­டு­கின்­றது. அது­மட்­டு­மல்­லாது பாகிஸ்­தான் தீவி­ர­வா­தி­க­ளுக்கு அடைக்­க­லம் கொடுத்து வரு­வ­தை­யும் அமெ­ரிக்கா கண்­டித்­த­து­டன் அதற்கு வழங்­கும் நிதி­யு­த­வி­யில் குறைப்­புச் செய்­துள்­ள­மை­யும் கவ­னிக்­கத்­தக்­கது.

முடி­யாத குரோ­தம்
அமெ­ரிக்கா மீது விமா­னத் தாக்­கு­தல்­கள் மூல­மா­கப் பேர­ழிவை ஏற்­ப­டுத்­தி­ய­மைக்­குக் கார­ண­மான கொடிய பயங்­க­ர­வாதி பின்­லா­டன் பாகிஸ்­தா­னி­ல் மறைந்­தி­ருந்­த­போதே அமெ­ரிக்க விசேட படை­யி­ன­ரால் கொல்­லப்­பட்­டான். பின்­லா­டன் தனது நாட்­டில் மறைந்­தி­ருந்­தமை தொடர்­பா­கப் பாகிஸ்­தான் எவ்­வித தக­வ­லை­யும் அமெ­ரிக்­கா­வுக்­குத் தெரி­விக்­க­வில்லை. இது அமெ­ரிக்­கா­வுக்கு அந்த நாட்­டின் மீது தீராத கோபத்தை ஏற்­ப­டுத்தி விட்­டது. ஆனால் இந்­தி­யா­வில் அவ்­வா­ற­ன­தொரு நிலை காணப்­ப­ட­வில்லை.

காஷ்­மீர்ப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு கிடைக்­கும் வரை­யில் இந்­தி­யா­வும், பாகிஸ்­தா­னும் மோதல் நிலை யைக் கடைப்­பி­டிக்­கவே செய்­யு­மென்­ப­தைத் தெளி­வா­கக் கூற­மு­டி­யும். ஆனால் இரண்டு நாடு­க­ளும் விட்­டுக்­கொ­டுக்­காமல் நடந்து கொள்­வ­தால் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­கு­ மென எதிர்­பார்க்க முடி­யாது. தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் அமை­திப் பேச்­சு­க்கு வரு­மாறு பாகிஸ்­தான் தலைமை அமைச்­சர் விடுத்த அழைப்பை இந்­தி­யத் தலைமை அமைச்­சர் ஏற்­றுக்­கொள்­ள­வதே சிறந்­த­தெ­னத் தெரி­கின்­றது. பாகிஸ்­தா­னுக்கு ஒரு இறு­திச் சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வ­தால் இந்­தியா தமது கோரிக்­கை­களை பாகிஸ்­தா­னுக்கு விடுக்க முடி­யும். இதில் திருப்தி ஏற்­ப­டா­த­வி­டத்து மாற்று நட­வ­டிக்கை தொடர்­பா­கச் சிந்­திக்க முடி­யும்.

இந்­தி­யத் தேர்­தல்
இந்­திய நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­கள் நெருங்­கி­வ­ரும் வேளை­யில் நரேந்­தி­ர­மோடி தமது பக்­கத்­தைப் பலப்­ப­டுத்­தவே விரும்­பு­வார். அவர் பாகிஸ்­தா­னுக்கு அடி­ப­ணி­வ­தாக ஒரு தோற்­றம் ஏற்­ப­டு­மா­னால் தேர்­த­லில் அவ­ருக்­குப் பாதிப்பே ஏற்­ப­டும். இத­னால் அவர் விட்­டுக்­கொ­டுப்­ப­த­ற்கு முன்­வ­ரு­வா­ரென எதிர்­பார்க்க முடி­ய­வில்லை.

ஆனால் இந்­தியா–பாகிஸ்­தான் போர் முளு­மா­னால் இரு­நாட்டு மக்­க­ளுக்­கும் பெரிய பாதிப்பு ஏற்­ப­டவே செய்­யும். அது­மட்­டு­மல்­லாது பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் பெரும் பாதிப்பு ஏற்­ப­டவே செய்­யும். இதி­லி­ருந்து மீள்­வது எளி­தான காரி­ய­மல்ல. ஆகவே போரை விடுத்து அமை­தியை நாடு­வதே இரண்டு நாடு­க­ளுக்­கும் பய­னுள்­ள­தாக அமை­யும்.

You might also like