போர் வானூர்­தி­கள் எவை­யும் – மத்­த­ளவில் இறங்க முடி­யாது!!

0 23

போர் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக வானூர்­தித் தளத்­தைப் பயன்­ப­டுத்­த­மு­டி­யாது என்­பது உட்­பட மேலும் சில முக்­கிய முன்­நி­பந்­த­னை­ க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே மத்­தள வானூர்­தித் தளத்­தின் முகா­மைத்­து­வம் இந்­தி­யா­வுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் மேற்­படி நிபந்­த­னை­கள் தளர்த்­தப்­பட மாட்­டாது என்று சிவில் வானூர்­திச் சேவை­கள் அமைச்­சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நிலை­யி­யற் கட்­ட­ளை­யின் 232இன்­கீழ் ஜே.வி.பியின் தலை­வர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்­க­வால் மத்­தல வானூர்தி நிலை­யம் தொடர்­பில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும் போதே அமைச்­சர் நிமல் சிறி­பால டி சில்வா இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது,

இந்­திய விமான நிலைய அதி­கா­ர­ச­பை­யு­டன் ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன்­னர் அது நாடா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­ப­டும்.

கடன்­சு­மைக்­குள் சிக்­கி­யுள்ள மத்­தல வானூர்­தித் நிலை­யத்தை செயற்­றி­றன்­மிக்க விமான நிலை­ய­மாக மாற்­றி­ய­மைத்து, நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­துக்­கும், சுற்­று­லாத்­து­றைக்­கும் பங்­க­ளிப்­பு­செய்து இலா­ப­மீட்­கும் துறை­யாக மாற்­றி­ய­மைப்­பதே அமைச்­சின் நோக்­க­மாக இருக்­கின்­றது.

உள்­நாட்டு, வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்து விலை­மனு கோரப்­பட்­டது. எந்­த­வொரு தரப்­பும் பெரி­தாக ஆர்­வம் காட்­ட­வில்லை. கிடைக்­கப்­பெற்ற 6 விண்­ணப்­பங்­க­ளி­லும் விமான நிலை­யத்­தின் ஒட்­டு­மொத்த நிர்­வா­கக் கட்­ட­மைப்­பை­யும் பொறுப்­பேற்­கத் தயா­ராக இருக்­க­வில்லை. தலைமை அமைச்­ச­ரு­டன் சீனா சென்­றி­ருந்த போதும் அந்த நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. எவ­ரும் முன்­வ­ர­வில்லை.

இந்­த­நி­லை­யி­லேயே இந்­தி­யா­வி­ட­மி­ருந்து அழைப்பு கிடைக்­கப்­பெற்­றது. அந்த யோச­னையை நான் அமைச்­ச­ர­வை­யில் முன்­வைத்­தேன். 70 வீத­மான பங்­கு­களை வாங்­கு­வ­தற்கு இணக்­கம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

அத­ன­டிப்­ப­டை­யில்­தான் மத்­தல வானூர்­தித் தளத்தை இலங்கை இந்­திய கூட்டு முயற்­சி­யாக தனி­யான நிறு­வ­ன­மொன்றை உரு­வாக்கி விமான நிலை­யத்­தின் முகா­மைத்­து­வத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

70 வீத­மான பங்­கு­களை வழங்­கு­வ­தன்­மூ­லம் கிடைக்­கும் நிதி­யைக்­கொண்­டு­க­டன்­களை மீள செலுத்­து­வதே எமது நோக்­க­மாக இருக்­கின்­றது.

தேசிய பாது­காப்பு, விமான நிலை­யத்­தில் பணி­யாற்­று­ப­வர்­க­ளின் தொழில் உரிமை ஆகி­யன தொடர்­பில் ஆழ­மா­கச் சிந்­தித்த பின்­னர், இந்த விவ­கா­ரத்தை கையாள்­வ­தற்கு இரண்டு குழுக்­கள் அமைக்­கப்­பட்­டன. இலங்­கை­யால் விதிக்­கப்­ப­டும் முன்­நி­பந்­த­னை­களை எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் தளர்த்­திக்­கொள்­ள­மாட்­டோம் என்­ப­தை­யும் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­யுள்­ளோம்.

அரச விலை மதிப்­பீட்­டா­ளர்­க­ளால் மதிப்­பி­டப்­ப­டும் தொகை­யில் 70 வீதத்தை இந்­திய நிறு­வ­னம் கட்­டா­யம் வழங்­க­வேண்­டும். அந்­தத் தொகையை ஒரு­சத வீதத்­தி­லே­னும் குறைக்­க­மாட்­டோம். இது ஒரு வர்த்­த­கக் கொடுக்­கல் வாங்­கல் மாத்­தி­ரமே. போர்­வி­மா­னங்­கள், போர்­ந­ட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்­றுக்கு விமா­ன­நி­லை­யத்தை பயன்­ப­டுத்த இட­ம­ளிக்­க­மாட்­டோம்.

விமா­னங்­க­ளின் பய­ணங்­க­ளை­யும், வான் பரப்­பைப் பயன்­ப­டுத்­து­வ­து­வ­தை­யும் இலங்­கையே கட்­டுப்­ப­டுத்­தும். விமான நிலை­யத்­தின் பாது­காப்பு நட­வ­டிக்­கை­யில்­கூட உள்­நாட்­ட­வர்­களே ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும். ஊழி­யர்­க­ளின் தொழில்­சார் உரி­மை­கள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் போன்ற நிபந்­த­னை­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றை எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் நாம் தளர்த்­திக்­கொள்­ள­மாட்­டோம்.

அதே­போல் ஐந்து வரு­டங்­க­ளுக்­குள் வினைத்­தி­றன்­மிக்க விமா­ன­நி­லை­ய­மாக இது கூட்­டு­மு­யற்­சி­யின் ஊடாக ஆக்­கப்­ப­ட­வேண்­டும் என­வும் கூறி­யுள்­ளோம். இதற்­கான வணி­கத் திட்­டம் முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டும். இந்­திய நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து அதற்­கான யோசனை கோரப்­பட்­டுள்­ளது.
தேசிய பாது­காப்பு, பொரு­ளா­தா­ரம், தொழில் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளை­யும் கருதி தற்­போது பேச்­சு­கள் நடத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றன. வெறு­மனே ஒப்­பந்­தத்­தில் கைச்­சாத்­தி­ட­மாட்­டோம்.

இலங்­கை­யி­லுள்ள சிவில் விமான சேவை­கள் சட்­டத்­தின்­பி­ர­கா­ரம், பெரு­ம­ளவு பங்­கு­களை வெளி­நாட்­டுக் கம்­ப­னிக்கு வழங்­கு­வ­தற்கு சட்­ட­ரீ­தி­யாக இட­மில்லை. எனவே, சட்­டத்­தில் திருத்­தம் செய்­யப்­ப­ட­வேண்­டும். அதற்­கான யோசனை நாடா­ளு­மன்­றத்­துக்கு வரும். சபை அங்­கீ­கா­ர­ம­ளித்­தால் தொடர்ந்­தும் முன்­னெ­டுக்­க­லாம். அவ்­வா­றில்­லை­யேல் அத்­து­டன் நட­வ­டிக்கை நிறை­வ­டைந்­து­வி­டும்.

நாம் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் சட்­ட­ரீ­தி­யா­கவே செய்­கின்­றோம். திருட்­டுத்­த­ன­மாக எதை­யும் செய்­ய­வில்லை. எம்­மால் தயா­ரிக்­கப்­ப­டும் ஒப்­பந்­தம் அமைச்­ச­ரவை, சட்­டமா அதி­பர் ஆகிய தரப்­பு­க­ளுக்கு வழங்­கப்­பட்டு, கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன்­னர் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­ப­டும்.- என்­றார்.

You might also like