மகனுடன் தானும் பரீட்சை எழுதிய தாய்!!

18 வருடங்களுக்கு முன்னர் 10-ஆம் வகுப்பை கைவிட்ட பெண் ஒருவர் தனது மகனுடன் சேர்ந்து 10-ஆம் வகுப்பு தேர்வெழுதி, தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி முதுலி. 36 வயதாகும் இவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் பசந்தியின் படிப்பு அத்தோடு தடைபட்டது. குழந்தைகள் பிறந்தாலும் கூட பசந்திக்கு 10-ஆம் வகுப்பை முழுமையாக முடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது.

அவரது மகன் 10-ஆம் வகுப்புக்கு சென்றார். எனவே மகனோடு இணைந்து தானும் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என பசந்தி முடிவு செய்தார். மகனும் அதற்கு உதவி செய்தார்.

பாடசாலையில் சொல்லிக் கொடுப்பதை வீட்டில் வந்து தன் தாயான பசந்திக்கு சொல்லிக் கொடுத்து வந்துள்ளார் அவரது மகன்.

இதனால் பசந்தி மற்றும் அவரது மகன் என இருவருமே 10-ஆம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்த பசந்தி, மகிழ்ச்சியில் கண்கலங்கினார். இனி வேலையிலும் பதவி உயர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

You might also like