மகிந்­த­வின் நெருங்கிய சகா பொன்­சே­கா­வுக்கு ஆத­ரவு!!

போருக்­குப் பயந்து நாட்­டை­விட்டு ஓடி­ய­வரே கோத்­த­பாய ராஜ­பக்ச. அவர் அரச தலை­வர் வேட்­பா­ளர் என்ற தகு­திக்­குப் பொருத்­த­மற்­ற­வர். தேசிய பாது­காப்பை முன்­னி­லைப்­ப­டுத்­தியே அரச தலை­வர் வேட்­பா­ளர் நிறுத்­தப்­பட வேண்­டு­மெ­னில் அதற்கு முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யான பீல்ட் மார்­ஷல் சரத் பொன்­சே­காவே தகு­தி­யா­ன­வர்.

இவ்­வாறு அதி­ர­டிக் கருத்­தைத் தெரி­வித்­துள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் சகா­வும் களுத்­துறை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான குமார வெல்­கம.

களுத்­து­றை­யில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.
அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது-

இந்த நாட்­டில் பாது­காப்­புத் தொடர்­பில் சரத் பொன்­சே­கா­வுக்கே போதிய அனு­ப­வம் உள்­ளது. போர் முடி­வ­டை­யும் வரை அவர் சேவை­யில் இருந்­த­வர். ஆனால், உதய கம்­மன்­பில கூறும் நப­ரான கோத்­த­பாய ராஜ­பக்ச போர்க் காலத்­தில் நாட்டை விட்டு அமெ­ரிக்­கா­வுக்கு ஓடி­ய­வ­ரா­வர். இப்­ப­டிப்­பட்­ட­வர் அதி­கா­ரத்­துக்கு வந்­தால் நாட்­டின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­வி­டும்.

அப்­ப­டி­யா­னால் 2010ஆம் நடை­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில் சரத் பொன்­சேகா ஏன் தோல்­வி­ய­டைந்­தார் என நீங்­கள் கேள்வி எழுப்­ப­லாம். இல­வ­சக் கல்­வியை அறி­மு­கப்­ப­டுத்­திய சி.டபிள்யூ.சி.கன்­னங்­க­ர­வையே தேர்­த­லில் தோற்­க­டித்த நாடு இது. இதை நாம் கவ­னத்­தில் வைத்­துக்­கொள்ள வேண்­டும் – என்­றார்.

You might also like