மகிந்த தரப்­பி­ன­ரின் நியா­ய­மற்ற பேச்சு!!

போர் நடந்த காலத்­தில் நடந்­த­வற்­றைப் பேசிப் பய­னில்லை என்­றும் அவற்­றைப் பேசிப் பேசி எத­னைக் கண்­டீர்­கள் என்­றும் கேட்­டி­ருக்­கி­றார் முன்­னாள் அமைச்­சர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்­தா­னந்த அளுத்­க­மகே. நேற்­றுக் கிளி­நொச்­சிக்கு வந்­தி­ருந்த அவர் அங்கு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டம் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் முக­வ­ர­மைப்பு என்­கிற ரீதி­யில் விமர்­சிக்­க­வும் அவர் தயங்­க­வில்லை. அவர் மட்­டு­மல்ல சில தினங்­க­ளுக்கு முன்­னர் யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்த மகிந்த ராஜ­பக்­ச­வின் புதல்­வர் நாமல் ராஜ­பக்­ச­வும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை வசை­பா­டத் தயங்­க­வில்லை.

தாம் மீண்­டும் ஆட்சி அதி­கா­ரத்­தைப் பிடிப்­ப­தற்­குக் கூட்­ட­மைப்­புத் தமக்கு உத­வ­வில்லை என்­கிற கோபம் அவர்­க­ளுக்கு இருப்­பதை அவர்­க­ளது கடு­மை­யான விமர்­ச­னங்­கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. கூட்­ட­மைப்­புத் தங்­களை ஆத­ரித்­தி­ருந்­தால் அல்­லது குறைந்­த­பட்­சம் எந்­தத் தரப்­பை­யும் ஆத­ரிக்­காது இருந்­தி­ருந்­தால் ஆட்­சி­யைத் தம்­மால் கைப்­பற்­றி­யி­ருக்க முடி­யும் என்று மகிந்த தரப்­பி­னர் கரு­து­வ­தால் அவர்­கள் கூட்­ட­மைப்­பின் மீது ஆத்­தி­ரம் கொண்­டி­ருக்­கின்­ற­னர் என்­பதை உய்த்­த­றி­வது ஒன்­றும் சிர­ம­மான காரி­ய­மல்ல.

அதே­நே­ரத்­தில் மீண்­டும் ஒரு தடவை தமிழ் மக்­கள் தம்­மைத் தோற்­க­டித்­து­வி­டக்­கூ­டாது என்­கிற அக்­கறை அவர்­க­ளி­டம் இருப்­ப­தை­யும் காண­மு­டி­கின்­றது.அத­னா­லேயே நாமல், அளுத்­க­மகே என்று மகிந்த தரப்­பி­னர் அடுத்­த­டுத்து வடக்­குக்கு வந்து தமிழ் மக்­க­ளைச் சந்­திக்­கி­றார்­கள். முடிந்த வரை­யில் தமிழ் மக்­கள் தமக்கு எதி­ரா­கப் போகா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவர்­கள் முயற்­சிக்­கின்­ற­னர்.
அளுத்­க­மகே­யின் நேற்­றைய உரை­யி­லும் இத­னைத் தெளி­வா­கக் காண­லாம்

. “யாழ்ப்­பாண மக்­கள் அர­சி­யல் தீர்­வைக் கேட்­க­வில்லை. அவர்­க­ளின் பொரு­ளா­தா­ரத்­தைப் பலப்­ப­டுத்த வேண்­டும். எமது காலத்­தில் வெள்ளை வான் என்­ற­தெல்­லாம் பொய். அது ஐக்­கிய தேசி­யக் கட்சி கூறிய கதை. இப்­போது போர் முடிந்­துள்­ளது. அமைதி இருக்­கின்­றது. கடந்ததை மறந்து இணைந்து வேலை செய்­வோம். போர் நடந்த காலத்­தில் ஆள்­கள் காணா­மல் போனார்­கள். கொழும்­பில் புலி­கள் குண்டு போட்­ட­போது எமது ஆட்­க­ளும் காணா­மல் போனார்­கள். நாங்­கள் என்ன செய்­வது? போர் நடந்த காலத்­தில் நடந்­த­வற்­றைப் பேசிப் பய­னில்லை. எத்­தனை காலம் அதைப் பற்­றிப் பேசு­வது? பேசிப் பேசி என்ன கிடைத்­தி­ருக்­கின்­றது? அதை விடுத்து நாம் இணைந்து வேலை செய்­வோம். கடந்த காலங்­க­ளில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் ஆத­ரவு கொடுத்­தா­கி­விட்­டது, சரத் பொன்­சே­கா­வுக்­கும் ஆத­ரவு கொடுத்­தா­கி­விட்­டது. தமிழ் மக்­க­ளுக்கு என்ன கிடைத்­தி­ருக்­கின்­றது என்று பார்க்க வேண்­டும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சுக்கு ஆத­ர­வ­ளித்­தது. அர­சி­யல் தீர்வு ஒன்எறைக் காண்பதற்காக கூறப்­பட்­டது. ஆனால் எது­வுமே நடக்­க­வில்லை“ என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் முன்­னாள் அமைச்­சர்.

மிகக் கொடூ­ர­மான ஒரு போரை நடத்தி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்­களை அதில் காவு கொண்டு மேலும் பல நூற்­றுக்­க­ணக்­கா­னோரை காணா­ம­லாக்­கிய ஒரு தரப்­பைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இப்­போது கடந்த காலங்­க­ளில் நடந்­த­வற்றை மறக்­கச் சொல்­வது மிக­வும் வேடிக்­கை­யா­னது. நடந்­த­வற்­றுக்கு நீதி கிடைப்­ப­தற்­குத் தடை­யாக இருப்­ப­வர்­க­ளும் இந்­தத் தரப்­பி­னரே. தமிழ் மக்­க­ளுக்­குத் தீர்வு ஒன்று கிடைத்­து­வி­டக்­கூ­டாது என்று கங்­க­ணம் கட்­டிக்­கொண்டு நிற்­ப­வர்­க­ளும் இவர்­களே. மக்­க­ள் மறதி நோய்க்கு ஆட்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்­கிற அதீத நம்­பிக்கை கார­ண­மா­கவே இந்த அர­சி­யல்­வா­தி­க­ளால் இத­னை­யெல்­லாம் சொல்ல முடி­கின்­றது.

மகிந்­த­வின் ஆட்­சி­யில் நிகழ்த்­தப்­பட்ட மிகக் கொடூ­ர­மான போரால் தாம் பட்ட துய­ரங்­களை மறந்­து­விட்டு மகிந்­தவை ஆத­ரிக்­கக் ­கோரு­வது அந்­தப் போரை­வி­டக் கேவ­ல­மா­னது.தீர்வு, போர்க்குற்ற விவ­கா­ரம் , காணி விட­யம், வடக்­குக் கிழக்கை பௌத்­த­ம­யமாக்­கு­தல் போன்ற தமி­ழர்­க­ளின் முக்­கிய பிரச்­சி­னை­கள் மீது எந்­த­வொரு பதி­லை­யும் தரா­மல் தம்மை ஆத­ரிக்­கு­மாறு அளுத்­க­மகே கேட்­பது நேர்­மை­யும் இல்லை; நியா­ய­மும் இல்லை.

You might also like