மகிந்த தலை­மை­யில் ஆட்சி !!

0 18

எந்த வகை­யி­லே­னும் அர­சைக் கவிழ்த்து, ஆட்­சி­யைக் கைப்­பற்ற வேண்­டிய அவ­சி­யம் கூட்டு எதி­ர­ணிக்கு எழுந்­துள்­ளது. மகிந்த தலை­மை­யில் ஆட்சி அமை­யு­மே­யா­னால், பிரச்­சி­னை­கள் பல­வற்­றி­லி­ருந்து தாம் தப்­பி­விட முடி­யு­மென இதில் அங்­கம் வகிப்­ப­வர்­கள் நினைப்­பதே இதற்­கான முக்கிய கார­ண­மா­கும்.

கொழும்­பில் பொதுமக்­க­ளைத் திரட்டி அர­சுக்கு எதி­ரான பெரும் பேர­ணி­யொன்­றைக் கூட்டு எதி­ரணி நடத்­தி­யது. இதன் மூல­மாக அரசை முற்­றா­கவே முடக்­கப் போவ­தாக மகிந்த தரப்­புக் கூறிய போதி­லும், அவ்­வாறு எது­வுமே இடம்­பெ­ற­வில்லை. பேரணி தமக்­குப் பெரு­வெற்­றி­யென கூட்டு எதிர­ணி­யும், அது படு­தோல்­வி­யில் முடிந்­து­விட்­ட­தாக அரசு தரப்­புக் கூறு­வ­தை­யும் அவ­தா­னிக்க முடி­கின்­றது. இவை­யி­ரண்­டை­யும் பக்­கம் சாராது நன்கு சீர்­தூக்­கிப் பார்க்­கும் போது­தான் உண்மை தெரி­ய­வ­ரும்.

ஆட்சி மாறு­வ­தென்­பது முக்­கி­ய­மா­ன­தல்ல. மக்­க­ளுக்கு நன்மை தரக்­கூ­டிய ஆட்சி அமை­வ­து­தான் முக்­கி­ய­மா­ன­தா­கும். மகிந்த தரப்­பி­னர் மக்­க­ளுக்கு நல்ல சேவையை ஆற்­ற­வேண்­டும் என்­ப­தற்­காக ஆட்­சிக்கு வரு­வ­தற்­குத் துடிக்­க­வில்லை. தமது சுய­இ­லா­பம் கரு­தியே தற்­போ­தைய ஆட்­சி­யைக் கலைத்­து­விட்­டுத் தாம் பத­வி­யில் அமர்­வ­தற்­குத் துடிக்­கின்­ற­னர். மக்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு இது தெரி­வ­தில்லை. அர­சி­யல்­வா­தி­க­ளின் பசப்பு வார்த்­தை­களை நம்பி அவர்­க­ளுக்கு ஆத­ரவு காட்­டவே அவர்­க­ளால் முடி­கின்­றது.

பிசு­பி­சுத்­துப் போன
அர­சுக்கு எதி­ரான கூட்டு
எதி­ர­ணி­யின் ஆர்ப்­பாட்­டம்

மகிந்த தரப்­பி­ன­ரின் பெரிய அள­வி­லான பரப்­பு­ரை­யு­டன் நடத்­தப்­பட்ட அர­சுக்கு எதி­ரான பேரணி, அந்த ஏற்­பாட்­டா­ளர்­கள் எதிர்­பார்த்த இலக்கை எட்ட முடி­யா­மல் தோல்­வி­யில் முடி­வ­டைந்­துள்­ள­ தாக நம்­ப­க­மான தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. பேர­ணிக்­கென நாட்­டின் பிற இடங்­க­ளி­லி­ருந்து கொழும்புக்கு அழைத்து வரப்­பட்ட பொது­மக்­கள், பேர­ணியை ஏற்­பாடு செய்­த­வர்­க­ளின் கோரிக்­கையை நிரா­க­ரித்­து­விட்டு இடை நடு­வில் வீடு­க­ளுக்­குத் திரும்­பிச் சென்­று­விட்­ட­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

இத­னால், விடிய விடி­யப் போராட்­டத்தை நடத்­து­வ­தற்­குத் திட்­ட­மிட்­ட­வர்­க­ளின் எதிர்­பார்ப்பு பிசு­பி­சுத்­துப் போனது. மக்­கள் தாமா­கவே விரும்பி பேர­ணி­யில் கலந்து கொண்­டி­ருந்­தால் இவ்­வாறு நடந்­தி­ருக்க மாட்­டாது.

மகிந்த ஆட்­சி­யில் இடம்­பெற்ற
ஊழல் மோச­டி­க­ளுக்கு கூட்டு அரசு
உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளத் தவ­றி­யது

கடந்த ஆட்­சிக் காலத்­தில் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் ஊழல் மற்­றும் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பாக தற்­போ­தைய அரசு உரி­ய­வ­கை­யில் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தால், மகிந்த தரப்­பி­னர் இந்த அள­வுக்கு அர­சுக்கு சவால் விடுக்­கும் விதத் தில் கிளர்ந்­தெ­ழுந்­தி­ருக்க மாட்­டார்­கள். அர­சுக்குச் சவால் விடுத்­தி­ருக்­க­வும் மாட்­டார்­கள். அர­சின் பல­வீ­னமே பின்னடைவுகள் சக­ல­துக்­கும் கார­ண­மா­கி­விட்­டது.

இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் தமிழ்மக்கள் மிக­வும் மோச­மான பாதிப்­புக்­களை எதிர்­கொண்டு வரு­கி­றார்­கள் என்­ப­தைக் கூறத்­தே­வை­யில்லை. தமது மொழி­யைக் காப்­பாற்­று­வ­தற்­கா­க­வும், உரி­மை­க­ளைப் பெறு­வ­தற்­கா­க­வும் அவர்­கள் தொடர்ந்து போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் 2015ஆம் ஆண்டு வரை மாறி­மாறி ஆட்­சிக்கு வரு­வதே வழக்­க­மாக இருந்­துள்­ளது.

தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு சிங்­கள
அர­சு­கள் உரிய தீர்வு வழங்­கப்­போ­வ­தில்லை

ஆனால் ஆட்சி மாறி­னா­லும் தமி­ழர்­க­ளுக்­குத் தீர்வு கிடைப்­ப­தென்­பது குதி­ரைக்­கொம்­புக்கு ஒப்­பா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள் எதை­யா­வது செய்­வ­தற்கு முற்­பட்­டால், அதைக் கண்­மூ­டித்­த­ன­மாக எதிர்ப்­ப­து­தான் எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்ந்­தி­ருப்­ப­வர்­க­ளின் வழ­மை­யாக இங்கு மாறி­விட்­டது. இத­னால் தமி­ழர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு என்­பது எட்­டாக் கனி­யாக மாறி­விட்­டது.

இன்­றைய நிலை­யில் மக்­கள் சகல வகை­யி­லும் பொரு­ளா­தார ரீதி­யான நெருக்­க­டி­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். தமது உண­வுப் பொருள்­க­ளி­லி­ருந்து தமது வேறு அத்­தி­யா­வ­சி­யத் தேவை­கள் அனைத்­துக்­கும் அதி­க­ள­வில் செலவு செய்ய வேண்­டிய நிலைக்கு அரசு அவர்­க­ளைத் தள்­ளி­விட்­டுள்­ளது.

இத­னால் அர­சின்­மீது இயல்­பா­கவே அவர்­க­ளுக்கு வெறுப்பு ஏற்­பட்­டுள்­ளது. கூட்டு எதி­ரணி, அர­சின் மீதான இத்­த­கைய மக்­க­ளின் வெறுப்பை தனக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தற்­குத் தீர்­மா­னித்­தி­ருப்­பதை, கொழும்­பில் இடம்­பெற்ற பேரணி உறுதி செய்­கின்­றது.

ஆனால் இவர்­கள் ஆட்­சிக்கு வந்­தா­லும், நாட்­டில் இதே நிலை­தான் நீடிக்­கப்­போ­கின்­றது. வௌிநா­டு­க­ளி­லி­ருந்து பெற்ற கடன்­கள் மக்­க­ளின் தலையை நெரித்­துக் கொண்­டி­ருக்­கும்வரை, பொரு­ளா­தார மீட்சி இந்த நாட்­டுக்கு கிடைக்­கப்­போ­வ­தில்லை.

மகிந்த தரப்­பின் ஆட்­சிக் காலத்­தில் இடம்­பெற்ற ஊழல், மோச­டி­க­ளும், வௌி நாடு­க­ளி­லி­ருந்து பெற்ற கடன்­க­ளும் நாட்­டின் பொரு­ளா­தார அத்­தி­பா­ரத்­தையே ஆட்­டம் காண­வைத்­து­விட்­டன. இவற்­றுக்­கெல்­லாம் தீர்வு என்ன என்­பதை மக்­கள் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.

கடும் இன­வா­தப்­போக்­கு­டைய தலை­வர்­களை அதி­க­ள­வில் கொண்ட கூட்டு எதி­ர­ணி­யி­னர் நாட்­டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு­போ­துமே தீர்­வைக் காண­மாட்­டார்­கள். இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு கண்­டு­விட்­டால், அவர்­க­ளால் அர­சி­யலை மேற்­கொண்டு நடத்­தவே முடி­யாது. இன­வா­தம் பேசிப்­பே­சியே பெரும்­பான்­மை­யின மக்­க­ளின் ஆத­ர­வைப் பெறு­வது இவர்­க­ளின் இராஜ தந்­தி­ர­மா­க­வுள்­ளது.

ஆனால் அந்த மக்­கள் உண்­மை­யைப் புரிந்து கொள்­ளும்­போது இவர்­கள் காணா­மல் போய்­வி­டு­வார்­கள். மக்­க­ளைத் தொடர்ந்­தும் ஏமாற்­ற­மு­டி­யாது என்­பதை கூட்டு எதி­ரணியினர் முத­லில் புரிந்து கொள்ள வேண்­டும். கொழும்­பில் அவர்­க­ளின் திட்­டம் பிசு­பி­சுத்­துப் போன­தற்கு கூட்டு எதி­ர­ணி­யி­ னர் குறித்த மக்களது வெறுப்பே கார­ண­மா­கும்.

You might also like