மக்களின் தெரிவுக்கு அமையவே- சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவம்!!

சம்­பந்­த­னுக்­குப் பிறகு, வடக்­குக் கிழக்­கில் வாழ்­கின்ற தமி­ழர்­கள் ஏற்­றுக் கொள்­ளக் கூடி­ய­தொரு தலை­மைத்­து­வத்தை தெரிவு செய்­வ­தற்­கான தேவை­யொன்று தமி­ழர்­கள் மத்­தி­யில் எழு­மென்­பதை எவ­ருமே மறுத்­துக்­கூற முடி­யாது.

இணைந்த வடக்­குக் கிழக்­கில் தமிழ் மக்­களே பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்­கின்­ற­னர்.இதையே தமது தாயக பூமி­யா­க­வும் அவர்­கள் தொன்­று­தொட்­டுக் கருதி வரு­கின்­ற­னர். திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளால் தமி­ழர்­க­ளின் இனப்­ப­ரம்­பல் சிதைக்­கப்­பட்­ட­போ­தி­லும், வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணம் என்­ற­தும் தமி­ழர்­க­ளின் நினைவே ஞாப­கத்­துக்கு வரு­கின்­றது.

தந்தை செல்­வா­வின்
உழைப்­பால் உரு­வாகி
வளர்ந்­தது தமி­ழ் அரசுக்கட்சி

இங்கு வாழ்­கின்ற மக்­க­ளின் அர­சி­யல் அடை­யா­ள­மாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு திகழ்­கின்­றது. தந்தை செல்வா தமது அர்ப்­ப­ணிப்பு நிறைந்த தியா­கத்­தை­யும், உழைப்­பை­யும் உர­மாக இட்டு வளர்த்த தமி­ழ­ர­சுக் கட்சி, கூட்­ட­மைப்­பின் பிர­தா­ன­மான பங்­க­ளிப்­பா­கத் திகழ்­கின்­றது. தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான சம்­பந்­தன், கூட்­ட­மைப்­பின் தலை­வராகவும் உள்­ளார்.

தற்­போது உள்ள தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளில் இவரே வடக்­குக் கிழக்கு மக்­க­ளால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அரசியல் தலைவராவார். தெற்­கில் மட்­டு­மல்­லாது பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் மத்­தி­யி­லும் இவ­ருக்கு ஆழ்ந்த மதிப்பு உள்­ளது. பன்­னாட்­டுப் பிர­தி­நி­தி­கள் இலங்­கைக்கு வரும்­போ­தெல்­லாம் தமிழ் மக்­க­ளின் ஏகப் பிர­தி­நிதி என்ற வகை­யில் அவர்­கள் சம்­பந்­த­னைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டாது சென்­ற­தில்லை.

தற்­போது கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­க­வும், அதன் தலை­மைக்கு எதி­ரா­க­வும் எதி­ர­ணி­யி­னர் கடு­மை­யான விமர்­ச­னங்ளை முன்­வைத்து வரு­கின்­ற­னர். அர­சி­யல் காழ்ப்­பு­ணர்வு கார­ண­மா­க­வும், அர­சி­ய­லில் தம்மை முன்­னி­றுத்த வேண்­டு­மென்ற சுய­நல எண்­ணம் கார­ண­மா­க­வும் சிலர் இவ்­வாறு நடந்து கொள்­வ­தைக் காண­மு­டி­கின்­றது. தலை­மைப் பத­வி­யில் பொருத்­த­மான எவ­ருமே அமர்ந்­து­விட முடி­யும். மக்­க­ளும் பொருத்­த­மா­ன­வர்­க­ளைத்­தான் தமது தலை­வ­ராக ஏற்­றுக்­கொள்­வார்­கள்.

தமி­ழ­ரல்­லாத போதி­லும்
தமிழ்­நாட்டு மக்­க­ளின் தலை­வ­ராக
மிளிர்ந்­த­வர் எம்.ஜி.ஆர்.

தமிழ்­நாட்­டில் முத­ல­மைச்­ச­ரா­கப் பதவி வகித்த எம்.ஜி.இரா­மச்­சந்­தி­ரன் ஒரு தமி­ழர் இல்­லை­யென்­பது அனை­வ­ருக்­கும் தெரிந்த விட­யம். மலை­யாள இனத்­தைச் சேர்ந்த அவர், தமிழ்த் திரைப்­ப­டங்­கள் மூல­மாக தமிழ் நாட்டு மக்­க­ளின் பேரன்­புக்­கு­ரிய வரா­னார். வறிய மக்­க­ளின் துயர்­கண்டு வருந்­திய அவர் தமது வரு­மா­னத்­தில் ஒரு பகு­தியை அவர்க ளுக்­குச் செல­விட்­டார். மக்­க­ளின் மனங்­க­ளி­லும் நிறைந்­தார். இறு­தி­யில் எவ­ருமே எதிர்­பார்க்­காத வகை­யில் தமிழ் நாட்­டின் முத­ல­மைச்­ச­ரா­னார். மக்­கள் ஏற்­றுக் கொண்­ட­தால் அவர் அவர்­க­ளின் தலை­வ­ரா­னார்.

ஆனால் இங்கு தலை­வ­ராக ஆகி­வி­ட­வேண்­டு­மென்ற எண்­ணத்­து­டன் வலம்­வ­ரு­கின்ற எவ­ருக்­கா­வது சரி, எம்.ஜி.ஆர் என்ற அந்த மகத்­தான மனி­த­ரின் தகு­தி­கள் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

கூட்­ட­மைப்­புத் தவிர்ந்த ஏனைய கட்­சி­க­ளின் தலை­வர்­கள் கூட்­ட­மைப்­பை­யும், சம்­பந்­த­னை­யும் விமர்­ச­னம் செய்­வ­தி­லேயே தமது நேரத்­தைச் செல­விட்டு வரு­கின்­ற­னர். தமது செயற்­பா­டு­கள் மூல­மாக அர­சி­ய­லில் முன்­னேற்­றம் காண்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்­கள் இவர்­க­ளி­டம் கிடை­யாது. கூட்­ட­மைப்பை அழித்­து­விட்டு மேன்­மை­பெற வேண்­டும் என்­பதே இவர்­க­ளது முழு நோக்­க­மா­கக் காணப்­ப­டு­கி­றது. கூட்­ட­மைப்­பைக் குறை­கூ­று­வ­தால் சில ஆதா­யங்­களை இவர்­கள் பெற்­றுக் கொண்ட போதி­லும், இதுவே நிரந்­த­ர­மா­கி­ வி­டு­மென எதிர்­பார்க்க முடி­யாது. ஏனென்­றால் மக்­க­ளைத் தொடர்ந்­தும் ஏமாற்ற முடி­யாது என்­பதை இவர்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.

மற்­ற­வர்­களை விமர்­சித்து
மக்­கள் மன­தில் எவ­ரா­லும்
இடம்­பி­டித்­து­விட முடி­யாது

ஆளுக்­கொரு திசை­யில் நின்று கொண்டு ஒரு­வரை ஒரு­வர் தூற்­றிக்­கொண்­டி­ருப்­ப­தாலோ, குறை­கள் தொடர்­கா­கவே பேசிக்­கொண்­டி­ருப்­ப­தாலோ மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைத்­து­விட மாட்­டாது. இர­ணை­தீ­வி­லி­ருந்து வௌியேற்­றப்­பட்ட மக்­கள் பல ஆண்­டு­கள் அவல வாழ்க்கை வாழ்ந்­துள்­ள­னர். இனி­யும் பொறுக்க முடி­யாது என்ற நிலைக்கு வந்­து­விட்ட அவர்­கள், பட­கு­க­ளில் ஏறிச் சென்று தமது மண்­ணில் இறங்­கித் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

அடிப்­படை வச­தி­கள் எது­வு­மற்ற நிலை­யில் ஆண்­கள், பெண்­கள், குழந்­தை­கள் எனப் பல­ரும் வச­தி­யீ­னங்­க­ளுக்கு மத்­தி­யி­லும் இலட்­சிய வெற்­றி­யொன்­றைத் தமது நெஞ்­சங்­க­ளில் சுமந்து கொண்டு போரா­டு­வ­தற்­குத் துணிந்­தமை தமி­ழர் வர­லாற்­றில் முக்கியமாகப் பொறிக்­கப்­பட வேண்­டிய ஒன்­றா­கும். இங்கு கூடத் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் தமது அர­சி­யல் இலா­பத்தை மட்­டுமே குறிக்­கோ­ளா­கக் கொண்டு செயற்­பட்­ட­தைக் காண­மு­டிந்­தது.

இவர்­கள் அனை­வ­ரும் ஒற்­று­மை­யு­டன் ஒன்­றாக அங்க சென்று அந்த மக்­க­ளைச் சந்­தித்­தி­ருந்­தால், தெற்­கில் மட்­டு­மல்­லாது உலக அரங்­கி­லும் அந்த மக்­க­ ளின் போராட்­டத்­துக்கு அது வலுச் சேர்த்­தி­ருக்­கும். ஆனால் மற்­ற­வர்­ளை­வி­டத் தாம் கெட்­டிக்­கா­ரர்­கள் என்ற ‘ஈகோ’ கார­ண­மாக நல்­ல­தொரு வாய்ப்பை அவர்­கள் நழுவ விட்­டு­விட்­டார்­கள்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­களை மட்­டுமே கணக்­கில் எடுத்து கூட்­ட­மைப்பு பின்­ன­டைவை எதிர்­கொண்டு வரு­வ­தாக கூறி­விட முடி­யாது. அர­சி­ய­லில் எழுச்சி பெறு­வ­தும், பின்­ன­டைவை எதிர்­கொள்­வ­தும் வழக்­க­மான நிகழ்­வு­கள்­தான்.

சம்­பந்­தனை ஓரம்­கட்­டி­விட்டு நான்­தான் தமி­ழர்­க­ளின் தலை­வ­னெ­னக் கூறிக்­கொண்டு வரு­வ­தற்­கான துணிவு இது­வரை எந்­தத் தமிழ் அர­சி­யல்­வா­தி­யி­ட­மும் இருக்­க­வில்லை. வெறு­மனே மாற்­றுத் தலைமை அது இது­வெ­னக் கூறிக்­கொண்­டி­ருக்­கவே அவர்­க­ளால் முடி­கின்­றது. அதை­வி­டச் சம்­பந்­த­னின் இடத்தை நிரப்­பக்­கூ­டிய தகு­தி­யும் வேறு எவ­ரி­ட­மும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

எது எப்­ப­டி­யி­ருந்த போதி­லும், தமக்­கேற்ற பொருத்­த­மான தலை­வர் ஒரு­வ­ரைத் தமிழ் மக்­கள் சம்­பந்­த­னுக்­குப் பிறகு தெரிவு செய்­யத்­தான் போகி­றார்­கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close