மண்வெட்டியால் தாக்கி கொலை!!

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினை மோதலில் முடிந்தது. இதில் நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இரத்தினபுரி கொடகவெல, மெந்தேகம பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது.

மெந்தேகம, யஹலவல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மண்வெட்டியால் தாக்கிய நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

You might also like