மத நல்லிணக்கம்- கிராம மக்களுக்கு விழிப்புணர்வு!!

‘மத சகவாழ்வு சமய நல்லிணக்கம்’ எனும் தொனிப்பொருளில் கிராம மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள், வவுனியாவில் நேற்று நடைபெற்றன.

வவுனியா கள்ளிக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நந்திமித்திர கம கிராமத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

வவுனியா சர்வமதக்குழுவும், தேசிய சமாதானப் பேரவையும் இணைந்து நிகழ்வுகளை நடத்தின.

போதை ஒழிப்பு, சிறுவர்களுக்கான அறநெறி போதித்தல் மற்றும் வாழ்வாதார உதவித்திட்டம் சுயதொழில் பயிற்சிகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டது.

நிகழ்வில் சர்வமதப் தலைவர்களும், மக்கள் பொலிஸ் சேவை பொறுப்பதிகாரியும், தேசிய சமாதானப் பேரவையின் இணைப்பாளரும், கிராமத்து மக்களும் கலந்து கொண்டனர்.

You might also like