மத வழிபாடுகளுக்கு முன்மாதிரியான – பருத்தித்துறை பொலிஸ் நிலையம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் அனைத்து மதத்தவர்களும் வழிபடக் கூடிய சர்வமத வழிபாட்டுத்தலம் இன்று சம்பிர்தாய பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காங்கேசந்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுகமசூரிய வழிபாட்டுத் தலத்தை திறந்து வைத்தார்.

இந்துக்கள் ,கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள்,பௌத்தர்கள் அனைவருடைய இஸ்ட தெய்வங்களும் அதில் வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் பொதுமக்கள் சமுக சேவையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You might also like