மன்னாருக்கு வருகை தந்த சஜித் – இனப்பிரச்சினை தொடர்பில் மௌனம்!!

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அரச தலை­வர் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டும் சஜித் பிரே­ம­தாச, தமிழ் மக்­கள் அதி­கம் வாழும் மன்­னார்மாவட்­டத்­துக்கு நேற்று வருகை தந்­த­போ­தும், இனப்­பி­ரச்­சி­னைத் தீர்வு தொடர்­பி­லேயோ அல்­லது தமிழ் மக்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பி­லேயோ வாய் திறக்­க­வில்லை.

மன்­னார் மாவட்­டத்­தில் சஜித் பிரே­ம­தா­ச­வின் அமைச்­சின் ஊடாக அமைக்­கப்­பட்ட வீடு­க­ளைத் திறந்து வைக்­கும் நிகழ்­வில் அவர் நேற்­றுப் பங்­கேற்­றார்.

அரச தலை­வர் தேர்­தல் நெருங்­கும் நிலை­யி­லும், அரச தலை­வர் வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் போட்­டி­யி­டப் போவ­தா­க­வும் தெரி­விக்­கும் சஜித் பிரே­ம­தாச, இந்த நிகழ்­வி­லும், அரச தலை­வர் தேர்­தல் தொடர்­பில் அதி­க­ளவு பரப்­பு­ரை­களை முன்­னெ­டுத்­தார்.

ஆனா­லும், தமிழ் மக்­க­ளின் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யான இனப் பிரச்­சினை தொடர்­பி­லேயோ அல்­லது காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம் தொடர்­பி­லேயோ, அர­சி­யல் கைதி­க­ளின் பிரச்­சினை தொடர்­பி­லோயோ மூச்­சும் காட்­ட­வில்லை.

You might also like