side Add

மன்னார் மாணவர்களுக்கு- வீதியோட்டப் போட்டி!!

மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வன்மைப் போட்டியின் முதல் நிகழ்வாக வீதி ஓட்டப்போட்டி(மரதன்) இன்று காலை நடைபெற்றது.

-பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் வீதி ஓட்டப்போட்டியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான போட்டி பிரதான வீதியூடாகச் சென்று மன்னார் வைத்தியசாலை வீதியைச் சென்றடைந்தது.

-அதனைத் தொடர்ந்து மன்னார் பள்ளிடுனை வீதியூடாகச் சென்று மன்னார் பஸார் பகுதியைச் சென்றடைந்து மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்தது.

போட்டியில் 1 ஆம் இடத்தை எம்.எம்.எம்.முஜாகிர் மற்றும் 2 ஆம்,3 ஆம் இடங்களை எம்.எல்.எம்.சல்மான் பாரீஸ் மற்றும் எம்.கே.எம்.வசீம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

You might also like