மருந்­தா­ளர்­க­ளின் அச­மந்­தத்­தைத் தீருங்­கள்!!

சுக­வீ­ன­முற்ற எனது குழந்­தைக்கு(வயது -1) மருந்து எடுப்­ப­தற்­கா­கக் கடந்த 17.9.2018அன்று யாழ். போதனா மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றி­ருந்­தேன். மருந்து எடுக்­கின்ற இடத்­தி­லுள்ள வரி­சை­யில் மூன்­றா­வ­தாக நின்­று­கொண்­டி­ருந்­தேன். மூன்­றா­வது நப­ராக நின்­றும் மருந்­தா­ள­ரி­டம் சென்று மருந்து எடுப்­ப­தற்கு நாற்­பது நிமி­டங்­கள் ஆகின.

இரண்டு மருந்­தா­ளர்­கள் வரை அங்கு பணியில் இருந்தும் ஏன் இந்த ஆமை­வே­கமோ தெரி­ய­வில்லை. முன்­னால் நின்­ற­வ­ரின் பிள்­ளையோ மூச்­சு­வி­டா­மல் அழு­தது. அதைப் பற்­றிக் கூடக் கவ­லைப்­ப­டா­மல் மருந்­தா­ளர்­க­ளின் அச­மந்­தம் தொடர்ந்­தது.

என்னை மட்­டு­மல்ல அங்கு நின்­றி­ருந்த அனை­வ­ரை­யுமே அவர்­க­ளின் நட­வ­டிக்கை எரிச்­ச­ல­டை­யச் செய்­தது. மருந்­தைச் சரி­யா­கக் கொடுக்க வேண்­டும் என அக்­க­றை­யு­டன் இருப்­ப­தில் தவ­றில்லை.

ஆனால் சாதா­ர­ண­மாக எம்­மா­லேயே சில மருந்­து­க­ளின் பெயர்­களை வாசித்­த­றிய முடி­யும்­போது இதற்­கா­கவே படித்த அவர்­க­ளுக்கு ஏன் இவ்­வ­ளவு நேரம் எடுக்­கி­றது? நன்கு பயிற்­றப்­பட்ட மருந்­தார்­க­ளைப் பணி­யிலே அமர்த்தி, பொது­மக்­கள் எதிர்­கொள்­கின்ற அசௌ­க­ரி­யத்தை நிவர்த்தி செய்து தரு­மாறு உரிய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளைத் தாழ்­மை­யு­டன் வேண்டி நிற்­கி­றேன்.

பாதிக்­கப்­பட்ட திரு­மதி நி.அர­விந்­தன்.

You might also like