மாட்டை குளிப்­பாட்­டி­ய­வரை கடித்­துக் குத­றி­யது முதலை!

மட்­டு­வி­லில் நேற்­றுச் சம்­ப­வம்

முத­லை­யால் கடி­யுண்ட குடும்­பத் தலைவர் ஒருவர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்­றுக் காலை மட்­டு­வில் கிழக்­கில் நடந்­துள்­ளது.

அதே இடத்­தைச் சேர்ந்த நாக­நாதி கிருஷ்­ண­மூர்த்தி (வயது-–58) என்­ப­வரே பாதிக்­கப்­பட்­டுள்­ளார். தனது வளர்ப்பு மாடு­க­ளைக் குளிப்­பாட்­டு­வ­தற்­காக அவர் வயல் பிர­தே­சத்­தில் உள்ள குளத்­துக்­குக் கொண்டு சென்­றுள்­ளார். மாட்­டைக் குளத்­தில் இறக்­கிக் குளிப்­பாட்­டிக் கொண்­டி­ருந்­த­போது அவ­ரது தொடைப் பகு­தியை முதலை கௌவிப் பிடித்­துள்­ளது.

உட­ன­டி­யாக அவர் முத­லை­யின் தாடை­களை பிடித்து வாயைப் பிளந்து அதைத் தூக்கி குளத்­தின் வெளியே எறிந்­துள்­ளாார். அதன்­பின்­னர் அலை­பேசி ஊடாக உற­வி­னர்­க­ளுக்­குத் தக­வல் தெரி­வித்­துள்­ளார். அவர்­கள் உட­ன­டி­யாக அங்கு சென்று அவரை மீட்டு சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­துள்­ள­னர்.

இவர் நீண்­ட­கா­லம் வன்­னிப் பகு­தி­யில் வசித்­த­வர் என­வும் தொடை­யில், கடித்­தது முத­லை­யென உணர்ந்து துரி­த­மா­கச் செயற்­பட்­ட­தால் முத­லை­யின் பிடி­யி­லி­ருந்து தப்­பி­னார் என்­றும் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

You might also like