மாணவனுக்கு உதவி!!

எரியும் உமிக்குள் தவறுதலாக வீழ்ந்து எரிகாயங்களுக்குள்ளாகி இரு கால்களையும் இழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த மாணவனுக்கு, தமிழ் விருட்சம் அமைப்பினரால் உதவிகள் வழங்கப்பட்டன.

அன்னை சாந்த நாயகி உதவும் கரங்கள் நற்பணிமன்றத்தின் நிதியுதவியுடன், மாணவன் இரு மாதங்கள் தனியார் வகுப்புக்குச் செல்வதற்கான நிதியுதவியாக 10 ஆயிரம் ரூபாவும், ஒரு மாதங்களுக்கான சத்துணவுப் பொருள்களும், உடுதுணிகளும் வழங்கப்பட்டன.

தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார் உதவிகளை மாணவனுக்கு வழங்கி வைத்தார்.

You might also like