மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி!!

மட்டக்களப்பு மேற்கு அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர் தலைவர்களுக்கான விழுமியக்கல்வியும், ஆளுமை விருத்தியும் என்ற தலைப்பிலான தலைமைத்துவப் பயிற்சி மயிலம்பாவெளி கருணாலய தியான மண்டபத்தில் நடைபெற்றது.

மூன்று நாள்கள் இடம்பெற்ற பயிற்சி முகாமில், 35 மாணவர்கள் பங்குபற்றினர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் உதவியுடன், பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளரின் ஒழுங்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தீப்பாசறை, மாணவர்களின் கலைநிகழ்வுகள் பலவும் அளிக்கை செய்யப்பட்டன.

You might also like