மின்­சா­ரக் கொள்­ளையை -தடுக்­காத பின்­னணி என்ன?

ஈபி­டிபி கட்­சி­யி­னர் பயன்­ப­டுத்­திய கட்­டடங்­கள் மற்­றும் அந்­தக் கட்­சி­யின் செய­லர் நாய­க­மும் முன்­னாள் அமைச்­ச­ரும் இந்­நாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்­தா­வின் முன்­னாள் அமைச்சு அலு­வ­ல­க­மான சிறி­தர் திரை­ய­ரங்­குக் கட்­ட­டம் என்­ப­வற்­றின் மின்­சா­ரக் கட்­டண நிலுவை ஒரு கோடி ரூபா­வுக்­கும் அதி­க­மா­கச் செலுத்­தப்­ப­டா­மல் இருக்­கின்­றது என்று செய்­தி­கள் வெளி­யாகி உள்­ளன.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் மற்­றும் அவ­ரது கட்­சி­யி­ன­ரால் செலுத்­தப்­ப­ட­வேண்­டிய மின்­சார நிலுவை பற்­றிய செய்தி வெளி­யா­வது இது முதற்­ற­ட­வை­யல்ல. பல லட்­சம் ரூபா நிலுவை இருக்­கும்­போதே அது தொடர்­பான தக­வல்­கள் வெளி­யாகி இருந்­தன. ஆனால், அப்­போ­தும் அதனை அற­வி­டு­வ­தற்கு மின்­சார சபை நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அது­மட்­டு­மல்­லா­மல் தொடர்ந்­தும் மின்­சார விநி­யோ­கத்தை வழங்கி வரு­கின்­றது.

டக்­ளஸ் தேவா­னந்தா அமைச்­ச­ராக இருந்த காலத்­தில் அவ­ரா­லும் அவ­ரது கட்­சி­யி­ன­ரா­லும் பயன்­ப­டுத்­தப்­பட்ட கட்­ட­டங்­க­ளின் மின் பாவனை நிலு­வையே இந்­தக் கட்­ட­ணம். ஈபி­டி­பி­யால் வெளி­யி­டப்­பட்ட பத்­தி­ரிகை அலு­வ­ல­கம் அமைந்­தி­ருந்த கட்­ட­டம், மகேஸ்­வரி நிதி­யம் அமைந்­தி­ருந்த கட்­ட­டம் மற்­றும் அமைச்­ச­ராக அவர் இருந்த காலத்­தில் அமைச்சு அலு­வ­ல­க­மாக இருந்த சிறி­தர் தியேட்­ட­ரின் மின்­சா­ரக் கட்­ட­ணம் உள்­ளிட்ட நிலு­வையே இன்று கோடி ரூபா­வை­யும் தாண்டி நிற்­கி­றது.

அத­னைக் கட்­டும்­படி டக்­ளஸ் தேவா­னந்­தா­வுக்கு மீண்­டும் மீண்­டும் பல நினை­வூட்­டல் கடி­தங்­கள் அனுப்­பப்­பட்­ட­ போ­து ம், தனது அர­சி­யல் அதி­கா­ரத்­தைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்தி அத­னைச் செலுத்­தா­மல் இருந்து வரு­கி­றார் அவர். மக்­க­ளின் வரிப் பணத்தை கொள்­ளை­ய­டித்­தி­ருக்­கும் அவ­ரது இந்­தச் செயல் குறித்து இன்­றைய அரச தரப்­பும்­கூட எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்­பது விச­னம் தரும் நகர்வு.

துணைப்­ப­டை­யாக ஈபி­டிபி இயங்­கிய காலங்­க­ளில் அது புரிந்­த­தா­கச் சுமத்­தப்­பட்­டுள்ள பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­கள் குறித்த விசா­ர­ணை­களை நடத்­தாத இந்த அரசு, இது­போன்று பட்­டப்­ப­க­லில் மக்­க­ளின் பணத்­தைக் கொள்­ளை­ய­டிக்­கும் செய­லை­யும் கண்­டும் காணா­மல் இருந்து வரு­வது மோச­மான கண்­ட­னத்­துக்­கு­ரிய நட­வ­டிக்கை.

பொது­ம­கன் ஒரு­வர் ஒரு­சில மாத மின்­சார வாட­கை­யைச் செலுத்­த­வில்லை என்­றால், சிவப்பு அறி­விப்­புக்­கூட தனி­யாக விடுக்­கா­மல் மின் இணைப்­பைத் துண்­டிக்­கும் மின்­சார சபை, கோடிக்­க­ணக்­கான ரூபாய் நிலுவை செலுத்­தப்­ப­டா­மல் இருந்­த­ போ­தும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் மீதும் அவ­ரது கட்­சி­யின் மீதும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கா­மல் இருப்­பது மாத்­தி­ர­மல்ல, தொடர்ந்­தும் மின்­சார விநி­யோ­கத்­தைக்­கூ­டச் செய்­வ­தும் கண்­ட­னத்­துக்­கு­ரி­யது.

அர­சி­யல்­வா­தி­க­ளுக்­குப் பயந்து மின்­சார சபை இப்­படி நடந்­து­கொள்­கி­றது என்­றும் இதைச் சொல்ல முடி­யாது. ஏனெ­னில் வேறு அர­சி­யல்­வா­தி­க­ளின் மின்­சார நிலு­வை­கள் விட­யத்­தில் இறுக்­க­மான நடை­மு­றையை மின்­சார சபை­யி­னர் பின்­பற்­றி­யி­ ருக்­கி­றார்­கள் என்­பது கடந்­த­கால உண்மை. அத­னால், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­மல் இருப்­ப­தற்கு அவர் அர­சி­யல்­வா­தி­யாக இருக்­கி­றார் என்­பது மட்­டுமே கார­ணம் என்று நம்­பி­விட முடி­ய­ வில்லை.

அத்­த­கை­ய­தொரு நிலை­யில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்­தா­வி­டம் இருந்து மின்­சார நிலு­வையை அற­வி­டு­வ­தற்கு மின்­சார சபை நட­வ­டிக்கை எடுக்­கா­த­தன் பின்­ன­ணி­யில் அதன் அதி­கா­ரி­க­ளுக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கும் இடை­யில் இர­க­சிய ஏற்­பா­டு­கள் இருக்­கின்­ற­னவோ என்­கிற சந்­தே­க­மும் ஏற்­ப­டு­கின்­றது.

வீடு­க­ளுக்­கான மாதாந்த மின்­சா­ரக் கட்­ட­ணத்தை உரிய நேரத்­தில் ஆள்­களை அனுப்­பிக் கணக்­கி­டா­மல், ஒரு மாதத்துக்கும் கூடு­த­லான காலத்­தின் பின்­னர் மின்­சார அல­கு­களை ஒரு சேரக் கணக்­கிட்டு, கூடு­தல் அல­கு­க­ளா­கக் கணித்து கூடு­தல் கட்­ட­ணத்­தைப் பொது­மக்­க­ளி­டம் இருந்து வறு­கும் மின்­சார சபை அதை இது­போன்ற அர­சி­யல்­வா­தி­கள் ஏப்­பம் விடா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும். ஏனெ­னில் அது மக்­கள் பணம். எனவே அதனை வசூ­லிப்­ப­தற்­கான சட்ட நட­வ­டிக்­கை­களை மின்­சார சபை உட­ன­டி­யாக எடுக்­க­வேண்­டும். இல்­லை­யேல் மக்­கள் அதற்­கெ­தி­ரா­கக் கிளர்ந்­தெழ வேண்­டி­யி­ருக்­கும்.

You might also like