side Add

மீண்­டும் எழு­வோம் பூமி­யில்!!

இழப்­புக்­கள் என்­பவை எப்­போ­தும் நிலைத்­தி­ருப்பு என்­ப­தில் பெரிய தாக்­கத்­தை­யும் அழி­வு­க­ளை­யும் நெகிழ்­வின்றி தந்­து­வி­டு­கின்­றன.இந்­தத் தாக்­கம் என்­பது தொட­ர­றாத சமூ­கத்­தின் ஒவ்­வொரு தனி­யன்­க­ள­தும் இருப்பை இயல்­பான நகர்­வில் இருந்து இடம் நகர்த்­து­கின்­றன.ஒற்­று­மை­யோ­டும் வாழ்­வின் நம்­பிக்­கை­யோ­டும் பய­ணிக்­கின்ற கூட்­டி­ணை­வான ஓர் சமூ­கம், தனது பய­ணத்­தில் சந்­திக்­கின்ற எதிர்­பா­ராத மிகப் பெரிய இடர்­க­ளும் மீள முடி­யாத அழி­வு­க­ளும், உயிர்ச் சேதங்­க­ளு­டன் மீண்­டு­வர முடி­யாத உளச்­சே­தங்­களை நீண்ட காலங்­க­ளுக்கு அழுது புலம்­பு­கின்ற உருப்­ப­டி­யா­கத் தந்து விடு­கின்­றது.

உருக் குலைந்த உற­வு­கள் மீண்­டு­வர முடி­ய­வில்லை.அந்த நினை­வு­கள் மீண்­டும் மீட்­டப்­ப­டு­கை­யில் உளக் குமு­ற­லாய் உடைப்­பெ­டுத்து மீண்­டும் உரு­வம் தொலைத்து துன்­பங்­க­ளால் உழன்று கொண்­டி­ருக்­கி­றோம்.தீர்வு என்­பது எமக்கு இன்­னும் கிட்­ட­வில்லை.மாறாக அழி­வு­கள் வந்து கசப்­பாய் எமை அதி­கா­ரம் செய்து தாள் பணி­யச் செய்­கின்­றது.

‘2009 – மே’ போரலை தமி­ழி­னத்­தின்
மீது திணித்த மிகப் பெரிய அழிவு!
2009 களின் நடுப்­ப­கு­தி­யிலே தமி­ழி­னத்­தின் மீது திணிக்­கப்­பட்ட மிகப் பெரிய அழிவு என்­பது ஓர் இனப்­ப­டு­கொ­லை­யாக வெளிக்­கி­ளம்­பி­யது. இலட்­சக்­க­ணக்­கான தமிழ் உற­வு­கள் தாய் நிலத்­தின் வழியே ஓர் அந்­தம் தொட்டு மறு அந்­தம் வரை துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டார்­கள்.அரு­மந்த உயிர்­க­ளும் உட­மை­க­ளும் மண்­ணோடு தாண்டு போயின. பல்­லா­யி­ரக் கணக்­கான உயிர்­க­ளைக் காவு கொண்ட இன­வ­ழிப்­பின் நினை­வு­க­ளில் இருந்து இன்­ன­மும் வெளி­வர முடி­ய­வில்லை. அழி­வு­க­ளின் உள்­ளி­ருந்து வெளிக்­கி­ளம்பி வர முடி­ய­வில்லை.உளச் சேதங்­க­ளில் இருந்து மீண்­டும் உயிர் பெற முடி­ய­வில்லை.வரு­ப­வர்­க­ளி­டம் சாட்­சி­யம் சொல்லி மண்­ணில் சாய்­கின்­றோம்.இது போர­லை­யால் எமக்கு வந்த சீர­ழி­வு­கள்.ஒன்­பது ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன இன்­ன­மும் தீர்­வின்றி நிர்க்­க­தி­யாய் அந்­த­ரித்து வாழ்ந்து வரு­கி­றோம்.

‘2004 – டிசெம்­பர்’ ஆழிப் பேரலை
தமி­ழி­னத்­தின் மீது திணித்த
மிகப் பெரிய அழிவு!
இந்­தப் போரலை அழி­வுக்கு முன்­ன­தான நர­ப­லி­யாக தமி­ழி­னத்­திடை வந்து போனது ஓர் அலை. அது ஆழிப் பேரலை.சுனா­மி­யாய் வந்து எம் உற­வு­க­ளுக்கு விடு­த­லை­யற்ற சாத­லைக் கொடுத்­தது.2004 ஆண்டு டிசெம்­பர் மாதம் 26 ஆம் திகதி எம் ஊர்­க­ளின் கரை­யோ­ரப் பிர­தே­சங்­கள் வழியே உய­ரப் பாய்ந்­தது. ஏது­ம­றிய எத்­தனை உற­வு­கள் மடிந்து போனார்­கள். உரு­வம் தொலைத்­த­னர்.சுமத்­திரா தீவு­க­ளில் சரி­யாக 6.58 நிமி­டங்­க­ளில் மையம் கொண்ட சுனாமி இலங்கை நேரப்­படி 9.25 நிமிட நகர்­வாகி கணப் பொழு­தில் எல்­லா­வற்­றை­யும் துவம்­சம் செய்­தது.ஏறத்­தாழ 1600 கிலோ மீற்­றர் தூரத்தை இரு மணி நேர இடை­வெ­ளி­யில் கடந்து வந்து பலரைக் காவு கொண்­டது.

சுனா­மிப் பேர­லை­யின்
உரு­வாக்­க­மும் அழி­வும்!
குறிப்­பாக இலங்கை,இந்­தியா,தாய்­லாந்து,இந்­தோ­னே­சியா,மலே­சியா எனப் பல நாடு­களைப் பேர­லை­யாய் படை­யெ­டுத்து தாக்கி அழித்­து­விட்­டது என­லாம்.கரை­யோ­ரங்­க­ளில் இருந்து உள்­நோக்கி தரை வழியே 5 கிலோ மீற்­றர் தூரம் வரை ஊடு­ரு­விய ஆழி­யின் கூலி­யான பேர­லை­கள் பல்­லா­யி­ரக் கணக்­கான உயிர்­க­ளை­யும் உட­மை­க­ளை­யும் உருக்­கு­லைத்­தது. 9.1 ரிச்­டர் அள­வு­டைய நில அதிர்­வின் உரு­வான இந்­தப் பேரலை, ஏறத்­தாழ 280,000 வரை­யான உயிர்­களை காவு கொண்­டது.இரண்டு இலட்­சங்­க­ளுக்­கும் மேற்­பட்ட மக்­களை மன உழைச்­ச­லோடு இருப்­பி­ட­மின்றி பல இடங்­க­ளுக்கு அலை­ய­விட்­டது.

வடக்கு கிழக்கு தமி­ழர் தாய­கப் பிர­தே­சங்­க­ளிலே, குறிப்­பாக யாழ்ப்­பா­ணம் 2 ஆயி­ரத்து 640 ,கிளி­நொச்சி 560,முல்­லைத்­தீவு 3 ஆயி­ரம்,மட்­டக்­க­ளப்பு 2 ஆயி­ரத்து 794,திரு­கோ­ண­மலை 1077 என மொத்­த­மாக 20 ஆயி­ரத்து 507 பேர் தங்­கள் உயிரை ஆழி­யின் ஊழிக் கூத்­துக்கு இரை­யாக்­கி­னர்.இவை­த­விர 4 ஆயி­ரத்து 190 பேர் காணா­மல் போன­து­டன் ஆயி­ரத்து 743 பேர் காயங்­க­ளுக்­கும் உள்­ளா­கி­னர்.பாது­காப்­பாக இருந்த உறை­வி­டங்­க­ளில் 57 ஆயி­ரத்து 400 வீடு­கள் முற்­றா­க­வும், ஒரு இலட்­சத்து 86 ஆயி­ரத்து 718 வீடு­கள் பகு­தி­ய­ள­வி­லும் சிதைந்து போயின.40 ஆயி­ரம் வரை­யான மக்­கள் நிர்க்­க­தி­யாய் அக­தி­யாய் அலைந்­த­னர். பலர் பேர­லை­யின் கோரத் தாண்­ட­வத்­தால் வித­வைக­ளா­க­வும் விதந்­துரைக் கப்பட்டனர்.

புதி­யன செய்­ய­வும், புதி­யன படைக்­க­வும் சிந்­த­னை­க­ளுக்­குச் செய­லு­ரு­வம் கொடுப்­போம்!
பொரு­ளா­தா­ரம்,வாழ்­வா­தா­ரம்,போக்­கு­வ­ரத்து,கல்வி என வாழ்­வின் ஆதா­ரங்­கள் பல­வும் நிர்க்­க­தி­யாய் போயி­ருந்­தன. 09களில் அந்த வலி­க­ளின் தொடர்ச்­சி­க­ளும் இழப்­புக்­க­ளும் இரட்­டிப்­பாக எமை தொடர்ந்­த­தால் அந்த நிலையை இன்­ன­மும் நினை­வு­க­ளில் இருந்து தூக்கி வீச முடி­ய­வில்லை. நினை­வி­ழத்­த­லுக்கு இடம் கொடாத நீண்ட அழி­வின் படி­மங்­களை எம் இனத்­தின் மீது இயற்­கை­யா­யும் திட்­ட­மிட்டுச் செயற்­கை­யா­யும் இடை­வி­ல­கல் இன்றி சாப­மாய் காலம் தந்­து­விட்­டது. கடந்து வரப் பல வழி­க­ளி­லும் போராடி வரு­கி­றோம்.

இந்­த­நி­லை­யிலே இத்­த­கைய இயற்­கை­யின் பேர­ழி­வு­க­ளில் இருந்து எமைப் பாது­காத்­துக் கொள்­ள­வும், இழப்­புக்­க­ளி­லும் துன்­பங்­க­ளி­லும் இருந்­தும் விடு­பட்டு ஆரோக்­கி­ய­மான சமூ­க­மாக மீண்­டெ­ ழ­வும் எங்­க­ளின் உள சமூக மேம்­பாட்டை வலுப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. நம்­பிக்­கை­யில் நலி­வின்றி ஒரு­வரை ஒரு­வர் ஆற்­றுப்­ப­டுத்­திக் கொள்ள முயற்­சிக்க வேண்­டும். மீள் நினை­வு­க­ளில் இருந்து ஓர­ள­வே­னும் விடு­பட்டு புதி­யன செய்­ய­வும், புதி­யன படைக்­க­வும் சிந்­த­னை­க­ளுக்­குச் செய­லு­ரு­வம் கொடுக்­க­வும் வேண்­டும்.வலி­கள் உணர்வு ரீதி­யிலே எமை உருக்­கி­னா­லும் அதை நினைத்து முடங்­கு­வ­ தால் எத­னை­யும் செய்து விட முடி­யாது என்­பதை உணர்ந்து புதி­ய­வர்­க­ளாக உரு­வெ­டுக்க வேண்­டும்.

You might also like