மீண்டும் பிரதமரானார் மோடி!!

கட்­டங்­க­ளாக இடம்­பெற்ற இந்­திய மக்­க­ள­வைத் தேர்­த­லில் தனிப்­பெ­ரும்­பான்மை பெற்­றது ஆளும் பார­திய ஜன­தாக் கட்சி. இந்த வெற்­றியை அடுத்து இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி மீண்­டும் அந்த நாட்­டின் தலைமை அமைச்­ச­ரா­வது உறு­தி­யா­னது.

ஏப்­ரல் 17ஆம் திகதி முதல் மே 19ஆம் திகதி வரை இந்­தி­யா­வில் மக்­க­ள­வைக்­கான தேர்­தல் 7 கட்­டங்­க­ளாக இடம்­பெற்­றது. 543 தொகு­தி­க­ளுக்­குத் தேர்­தல் இடம்­பெற்­றது. வர­லாற்­றில் என்­றுமே இல்­லாத அள­வுக்கு பார­திய ஜன­தாக் கட்சி காங்­கி­ரஸ் கட்­சி­யை­யும் விட அதிக வேட்­பா­ளர்­களை நிறுத்­தி­யது. இதன்­படி பா.ஜ.க 437 வேட்­பா­ளர்­க­ளை­யும், காங்­கி­ரஸ் 421 வேட்­பா­ளர்­க­ளை­யும் நிறுத்­தின.

பார­திய ஜன­தாக் கட்சி தேர்­தல் காலத்­தி­லும் அதற்கு சில மாதங்­க­ளுக்கு முன்­ன­தா­க­வும் சில சர்ச்­சை­களை எதிர்­கொண்­டது. குறிப்­பாக பாகிஸ்­தா­னு­ட­னான மோதலை தனது தேர்­தல் பரப்­பு­ரைக்­காக அந்­தக் கட்சி பயன்­ப­டுத்­து­கி­றது என்று குற்­றஞ்­சு­மத்­தப்­பட்­டது.

பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்­கை­யா­லும் அந்­தக் கட்சி அதி­கம் விமர்­சிக்­கப்­பட்­டது. எனி­னும் தன் மீதான விமர்­ச­னங்­களை ஓயாத பரப்­பு­ரை­க­ளால் அந்­தக் கட்சி எதிர்­கொண்­டது. வாக்­குப் பதி­வு­கள் நிறை­வ­டைந்து வாக்­கு­கள் எண்­ணும் பணி­கள் நேற்று இடம்­பெற்­றன.

நேற்று இரவு 10 மணி வரை­யி­லான நில­வ­ரத்­தின்­படி 543 தொகு­தி­க­ளில் 300 தொகு­தி­க­ளைக் கைப்­பற்றி பா.ஜ.க. முன்­னி­லை­யில் இருந்­தது. காங்­கி­ரஸ் 83 தொகு­தி­க­ளை­யும் பெற்­றி­ருந்­தது. ஏனைய கட்­சி­கள் 80 தொகு­தி­க­ளைக் கைப்­பற்­றி­யி­ருந்­தன. மீத­முள்ள 80 தொகு­தி­க­ளில் 46 தொகு­தி­க­ளில் பா.ஜ.க முன்­னிலை பெற்­றி­ருந்­தது.

வெற்­றி­யின் பின்­னர் கருத்து வெளி­யிட்ட மோடி, தமக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தார். அத்­து­டன் இனி­வ­ரும் காலங்­க­ளில் இந்­தியா அனைத்­துத் துறை­க­ளி­லும் வள­ரும். இணைந்து பய­ணிப்­போம் – என்று குறிப்­பிட்­டார்.

You might also like