side Add

மீண்டும் முருங்கை மரம் ஏறிய…

தமி­ழிலே விக்­கி­ர­மா­தித்­தன் கதை­கள் மிக­வும் பிர­ப­லம். விக்­கி­ர­மா­தித்த மன்­ன­னின் முது­கில் ஏறிக்­கொண்ட வேதா­ளம் ஒவ்­வொரு கதை­யாக 32 கதை­க­ளைக் கூறி அதன் இறு­தி­யில் ஒரு வினா­வை­யும் கேட்­கும். அதற்­குச் சரி­யான விடையை மன்­னர் கூற­வேண்­டும்.

இல்­லை­யேல் தலை வெடித்­து­வி­டும். ஒவ்­வொரு கதை­யின் இறு­தி­யி­லும் கேள்­விக்­குச் சரி­யான விடை மன்­னர் சொன்­ன­தும் வேதா­ளம் மீண்­டும் ஓடிச் சென்று முருங்கை மரத்­தில் தொங்­கிக் கொள்­ளும். இப்­ப­டியே 32 கதை­க­ளும் முடி­யும் வரை­யில் வேதா­ளம் மீண்­டும் மீண்­டும் முருங்கை மரத்­தில் போய் ஏறிக்­கொள்­ளும்.

கொழும்பு அர­சி­யல் குழப்­பத்­தை­யும் அதைத் தீர்ப்­பது தொடர்­பில் அரச தலை­வ­ருக்­கும் மற்­ற­வர்­க­ளுக்­கும் நடக்­கும் பேச்­சுக்­கள், கலந்­து­ரை­யா­டல்­க­ளை­யும் பார்க்­கும்­போது வேதா­ளம் மீண்­டும் மீண்­டும் முருங்கை மரம் ஏறு­கின்ற விக்­கி­ர­மா­தித்­தன் கதை­தான் ஞாப­கத்­திற்கு வரு­கின்­றது.

ஐப்­பசி 26ஆம் நாள் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­னார் அரச தலை­வர். அதன் பின்­னர் அவர் தலைமை அமைச்­ச­ராக நிய­மித்த மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்மை உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு கிடைக்­க­வில்லை.

மாறாக மகிந்­த­வுக்கு எதி­ரா­கப் பெரும்­பான்மை உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் வாக்­க­ளித்­த­னர். இதை­ய­டுத்து நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து ஒரு பொதுத் தேர்­த­லுக்கு உத்­த­ர­விட்­டார் மைத்­திரி. அப்­படி அவர் விடுத்த அறி­விப்பு மீது இடைக்­கா­லத் தடை விதித்­தது உயர் நீதி­மன்­றம்.

அர­சி­யல் சூழல் இவ்­வாறு மைத்­திரி –மகிந்­த­வுக்கு எதி­ராக விரிந்து சென்ற பின்­ன­ணி­யில், ரணி­லைத் தவிர்த்து வேறு எவ­ரா­வது முன்­வந்­தால் அவ­ரைத் தலைமை அமைச்­ச­ராக்­கு­வ­தற்­குத் தான் தயார் என்று அமை­திக்­கான வெள்­ளைக் கொடி காண்­பித்­துக்­காட்­டி­னார்.

ஆனால் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சரி ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யும் சரி அத்­த­கையை ஓர் இணக்­கப்­பாட்­டுக்கு மைத்­தி­ரி­யு­டன் வரு­வ­தற்­குத் தயா­ராக இருக்­க­வில்லை.

இதற்­கி­டை­யில் ரணில் தலை­மை­யி­லான ஆட்­சிக்­குத் தமது 14 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நேர­டி­யாக ஆத­ர­வ­ளிக்­கின்­ற­னர் மைத்­தி­ரிக்கு அறி­வித்­தது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. இதன் மூலம் ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சுக்­குப் போதிய பெரும்­பான்மை, 116 உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு இருப்­ப­தும் சந்­தே­கத்­திற்கு அப்­பாற்­பட்டு நிரூ­பிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து அரச தலை­வர் விரும்­பியோ விரும்­பா­மலோ ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே மீண்­டும் தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்க வேண்­டிய நிலமை ஏற்­பட்­டது. இத்­த­கைய நிலை­யில் கார்த்­திகை 30ஆம் நாள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் நடந்த சந்­திப்­பின் பின்­னர் அர­சி­யல் குழப்­பத்­துக்கு ஒரு தீர்வு காணப்­ப­டு­வ­தற்­கான அறி­குறி தென்­ப­டு­வ­தாக உண­ரப்­பட்­டது.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்மை இருப்­பதை 5ஆம் திகதி, அதா­வது இன்று முறைப்­படி நிரூ­பித்­தால் அதனை ஏற்­றுக்­கொண்டு அதன்­படி நடப்­பார் என்று மைத்­திரி உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்.
ஐக்­கிய தேசிய முன்­னணி யாரைத் தனது தலைமை அமைச்­ச­ரா­கக் கையைக் காட்­டு­கி­றதோ அவ­ரையே தலைமை அமைச்­ச­ராக்­க­வேண்­டும் என்று எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் இந்­தச் சந்­திப்­பில் அழுத்­த­மா­கத் தெரி­வித்­தி­ருந்­தார். இத­னால் நிலமை சுமு­க­மா­கிக் குழப்­பம் தீரும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் நேற்­று­முன்­தி­னம் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் தலை­வர்­க­ளைச் சந்­தித்­த­போது, வேதா­ளம் மீண்­டும் முருங்கை மரம் ஏறிய கதை­யாக நாடா­ளு­மன்­றத்­தின் ஒட்­டு­மொத்த உறுப்­பி­னர்­க­ளும் ஆத­ர­வ­ளித்­தா­லும்­கூட ரணி­லைத் தான் மீண்­டும் தலைமை அமைச்­ச­ராக்க மாட்­டார் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் அரச தலை­வர். மொத்­தத்­தில் இந்­தப் பிரச்­சினை தீர்­வ­தற்­கான அறி­கு­றி­கள் ஏது­மில்லை.

You might also like