side Add

மீன­வர்­கள் இரு­வர் மாயம்!!

மன்­னா­ரில் இருந்து கடற்­றொ­ழி­லுக்­குச் சென்ற இரண்டு மீன­வர்­கள் மாய­மா­கி­யுள்­ள­னர். அவர்­க­ளைத் தேடும் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

மன்­னார் வங்­கா­லை­யில் இருந்து பி.லியோ­பாஸ் என்­ப­ருக்­குச் சொந்­த­மான 2196 இலக்­கப் பட­கில் நேற்­று­முன்­தி­னம் மீன்­பி­டிப்­ப­தற்­காக வங்­கா­லை­யைச் சேர்ந்­த­வர்­க­ளான செபஸ்­ரி­யன் பிரன்­மார்க், மற்­றும் ரூபி­லஸ் மொறா­யிஸ் ஆகிய இரு­வ­ரும் சென்­றுள்­ள­னர்.

இவர்­கள் பய­ணித்த 2196 என்ற இலக்­கப் படகு தமி­ழ­கம் இரா­மேஸ்­வ­ரம் சேரான்­கோட்டை கடற்­ப­கு­தி­யில் நேற்­றுக் கரை­யொ­துங்­கி­யது. எனி­னும் மீன­வர்­கள் தொடர்­பில் எந்­தத் தக­வ­லும் தெரி­ய­வ­ர­வில்லை. அவர்­கள் மாய­மா­கி­யுள்­ள­னர். இதை­ய­டுத்து அவர்­க­ளைத் தேடும் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தத் தக­வலை வட­மா­காண கடற்­தொ­ழில் இணை­யத்­தின் தலை­வர் என்.எம்.ஆலம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இந்­தப் படகு நேற்­று­முன்­தி­னம் புதன்­கி­ழமை மாலை மீன் பிடிக்க கட­லுக்கு சென்­றது. இரண்டு மீன­வர்­கள் பட­கில் பய­ணித்­துள்­ள­னர்.

அவர்­கள் இன்­ன­மும் (நேற்று மாலை­வரை) கரை­தி­ரும்­ப­வில்லை. மீன­வர்­க­ளைத் தேடும் பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மீன­வர்­களை மீட்­கும் பணி­களை இலங்கை – இந்­திய அர­சு­கள் விரைந்து முன்­னெ­டுக்க வேண்­டும் – என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

You might also like