முட்­டுச் சந்­தில் சிக்­கி­யுள்ள தமி­ழர் தீர்வு முயற்­சி­கள்!!

அண்­மைக்­கால அர­சி­யல் நிகழ்­வு­கள் தமிழ் மக்­க­ளுக்­குத் திருப்தி தரு­வ­ன­வாக இல்லை. தமி­ழர்­கள் பெரி­தும் எதிர்­பார்த்­தி­ருந்த புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் சாத்­தி­ய­மில்லை என்ற நிலை தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. இந்த விட­யத்தை முன்­ன­கர்த்­திச் செல்­வ­தற்­கு­ரிய ஆயத்­தங்­கள் எது­வும் இல்­லாது, அடுத்து என்ன நகர்வை மேற்­கொள்­வது என்­பது தெரி­யாது தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் முட்­டுச் சந்­தில் சிக்­கிக்­கொண்ட நிலை­யி­லேயே உள்­ள­மையை அவர்­கள் அண்­மைக்­கா­ல­மா­கத் தெரி­வித்­து­ வ­ரும் கருத்­துக்­கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம், தமி­ழர் பிரச்­சி­னைக்­குத் தீர்வு என்ற கோசங்­க­ளு­டன் மைத்­திரி – – ரணில் தலை­மை­யி­லான அரசு 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்­தது. நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் தமிழ் அர­சி­யல் பிர­தி­நி­தி­கள் அந்த அர­சுக்கு ஆத­ரவு வழங்­கி­னர். அப்­போது அர­சு­டன் எழுத்­து­மூ­ல­மான உடன்­ப­டிக்­கை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மேற்­கொள்­ள­வில்லை என்ற விமர்­ச­னங்­கள் எழுந்­த­போது, இத­ய­பூர்­வ­மான உடன்­ப­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது, இந்த அரசு ஏமாற்­றாது என்று தமிழ் அர­சி­யல் பிர­தி­நி­தி­கள் அதீத நம்­பிக்கை வெளி­யிட்­டி­ருந்­த­னர்.

அதன்­பின்­னர் அர­ச­மைப்பு உரு­வாக்­கப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போ­தும், அது தற்­போது இடை­ந­டுவே நிறுத்­தப்­பட்­டது. அதை­வி­ட­வும் காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­கள் விடு­விப்பு என்­பன போன்ற விட­யங்­க­ளுக்­கும் தீர்வு காணப்­ப­டாத நில­மையே காணப்­ப­டு­கின்­றது. தற்­போ­தைய அர­சி­லும் தமி­ழர் நிலங்­கள் அப­க­ரிப்பு, பௌத்த மய­மாக்­கல் என்­ப­ன­வும் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளன.

தற்­போ­தைய அரசு பல தட­வை­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உத­வி­யு­டன் தப்­பிப் பிழைத்­துள்­ள­போ­தும், அந்­தச் சந்­தர்ப்­பங்­க­ளில் தனது அதி உச்ச பேரம் பேசும் திற­னைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புப் பிர­யோ­கித்­ததா என்­பது கேள்­விக்­குட்­ப­டுத்­தும் விட­ய­மா­கவே உள்­ளது. தற்­போது அர­ச­மைப்பு உரு­வாக்­கம் சாத்­தி­ய­மில்லை என்­பது தெளி­வா­கத் தெரி­யும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச முதல் தெற்­கில் உள்ள பெரும்­பான்­மை­யான அர­சி­யல் கட்­சி­கள் அர­மைப்பு உரு­வாக்­கத்­துக்கு எதி­ரான கருத்­துக்­க­ளையே முன்­வைத்து வரு­கின்­றன. அவர்­கள் அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்கு ஆத­ர­வ­ளிக்­கப் போவ­தில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் உள்ள அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும் இதைத் தற்­போது வெளிப்­ப­டை­யா­கக் கூறத் தொடங்­கி­யுள்­ள­னர்.

தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வு­டன் தற்­போது அரசு பத­வி­யில் இருந்­தா­லும் தமி­ழர்­கள் தீர்வு விட­யத்­தில் அது கொண்­டுள்ள மன­நிலை கடந்த வாரம் நாடா­ளு­மன்­றில் அர­ச­மைப்பு உரு­வாக்க முன்­ன­கர்த்­தல் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கொண்­டு­ வந்த தீர்­மா­னத்­தின்­போது தெளி­வாக வெளி­வந்­துள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தீர்­மா­னம் தொடர்­பாக உரை­யாற்­றும்­போது நாடா­ளு­மன்­றில் ஆளும், எதி­ரணி உறுப்­பி­னர்­கள் இருக்­க­வில்லை. இதை தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தில் அவர்­கள் கொண்­டுள்ள மன­நி­லை­யின் வெளிப்­பா­டா­கவே பார்க்க வேண்­டும்.

இந்த அர­சைக் கொண்டு தீர்­வைப் பெற்­றுக்கொள்ள முடி­யும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இனி­யும் நம்­பிக்கை கொள்­வது ஏற்­கத்­தக்­கதா என்­பது கேள்­விக்­கு­ரி­யதே. இவ்­வா­றான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அண்­மைக்­கால நகர்­வு­கள் காலத்தை இழுத்­த­டித்­துச் செல்­லும் வகை­யில் அமைந்­தி­ருக்­கின்­றதா என்ற சந்­தே­கம் மக்­கள் மத்­தி­யில் எழு­கின்­ற­மை­யும் தவிர்க்க முடி­யாது. எந்த எதிர்­கா­லத் திட்­டங்­க­ளும் இல்­லாது கண்­மூ­டித்­த­ன­மான நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் சிங்­கள அர­சுக்கு ஆத­ரவு வழங்­கித் தற்­போது முட்­டுச் சந்­தில் முட்­டிக் கொண்ட நிலை­யி­லேயே தமிழ் தலை­வர்­கள் உள்­ள­னரா என்ற சந்­தே­கத்­தை­யும் தற்­போ­தைய நிலமை­கள் ஏற்­ப­டுத்­து­கின்­றன.

காலத்தை இழுத்­துச் செல்­லும் நோக்­கு­டன் தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் செயற்­ப­டு­வார்­க­ளே­யா­னால் அது மக்­கள் மத்­தி­யில் பெரும் விமர்­ச­னத்தை ஏற்­ப­டுத்­தும். அது எதிர்­கா­லத்­தில் தமி­ழர்­க­ளின் பலத்­தில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தில் எந்­தச் சந்­தே­க­மும் இல்லை. தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் அதை உணர்ந்து வெளிப்­ப­டை­யாக, தமி­ழர் தீர்வு தொடர்­பான முயற்­சி­களை முன்­னெ­டுப்­பதே சால­வும் சிறந்­தது.

You might also like