முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு!!

கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தை 4000 ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியர்களாக சுமார் 4500 பேர் கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் நியமனத்துடன் கடமையாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக 3000 ரூபா வீதம் மாதாந்த சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

சம்பளம் தமக்குப் போதாமை தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதற்கமைவாக திறைசேரி,மாகாண கல்வியமைச்சு , நிதி அமைச்சு போன்றவற்றுடன் கலந்துரையாடியதன் பின்னர், அனைவரினதும் இணக்கத்துடன் ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தினை 3000 ரூபாவில் இருந்து முதல் 4000ரூபா வரை அதிகரித்து வழங்க ஆளுநர் மாகாண கல்வியமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைவாக எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4000 ரூபாவாக வழங்கப்படும்.

You might also like