முல்­லை­த்தீவில் வான் படை­யி­ன­ரின் ஏ.கே. 47 துப்பாக்கி மாயம்!!

வான் படை­யி­ன­ரின் காவ­ல­ர­ணில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஏ.கே 47 துப்­பாக்­கி­யைக் காண­வில்லை என்று முல்­லைத்­தீ­வில் முப்­ப­டை­யி­ன­ரு­டன் பொலி­ஸா­ரும் இணைந்து தேடு­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­ட­னர்.

முல்­லைத்­தீவு கேப்­பா­பி­லவு பகு­தி­யில் அமைந்­துள்ள இலங்கை வான் படை­யி­ன­ரின் காவ­ல­ர­ணில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஏ.கே. 47 துப்­பாக்­கியே காணா­மற் போயுள்­ளது. சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்­றுள்­ளது. துப்­பாக்­கி­யைத் தேடி அது கிடைக்­காத நிலை­யில் வான் படை­யி­னர் முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸில் நேற்று முறைப்­பாடு பதிவு செய்­த­னர். இந்த நிலை­யி­லேயே முல்­லைத்­தீ­வில் தேடு­தல்­கள் இடம்­பெற்­றன.

இதில் பொலி­ஸார் மற்­றும் இரா­ணு­வப் பொலி­ஸார், படை­யி­னர், வான் படை­யி­னர் என்று பெரு­ம­ள­வா­ன­வர்­கள் காட்­டுப்­ப­கு­தி­கள், மற்­றும் வாவெட்­டி­கு­ளம், நந்­திக்­கு­ளம் போன்ற பகு­தி­க­ளி­லும் தொடர்­சி­யான தேடு­தல் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­த­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close