மெது­மெ­து­வாக யதார்த்­த­மாகிவரும் எதிர்வு கூறல்!!

கடந்த வரு­டம் யாழ்ப்பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் கோண்­டா­வி­லில் இடம்­பெற்ற ஒரு நிகழ்­வில் வைத்­துத் தெரி­வித்த முக்­கிய விட­யம் இன்று முழுக்க முழுக்க யதார்த்­த­மாகி வரு­வ­து­போன்று தென்­ப­டு­கி­றது.

வட­மா­கா­ணத்­தின் உன்­ன­த­மான யாழ்ப்பாண பல்­க­லைக்­க­ழ­கத்தை நாம் சரி­யா­கப் பயன்­ப­டுத்த முடி­யாது போனால், தமிழ் மாண­வர்­கள் இரண்­டா­வது பட­ச­மா­கவே தொகை­யி­டப்­ப­டு­வார்­கள். இதுவே தற்­போது சாத்­தி­ய­மா­கப் போகி­றது. இப்­பொ­ழுதே அதன் சுவாத்­தி­யத்தை நாம் அனு­ப­விக்­கின்­றோம்.

தூர நோக்­கோடு எடுத்­தி­யம்­பி­ய­வர்­க­ளில் ஒரு­வர் ஒரு பேரா­சி­ரி­யர்! மற்­ற­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர். பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனு­மதி பெற்­ற­வர்­க­ளில் பெரும்­பா­லான எம்­ம­வர்­கள் கலைப்­பீ­டங்­க­ளுக்கே உரி­ய­வர்­க­ளா­கின்­ற­னர்; விரும்­பு­கின்­ற­னர்; ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

விஞ்­ஞான, கணித, தொழில் நுட்ப, நிர்­மாண, வணிக, ஆங்­கில பாடங்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் தமிழ் மாண­வர்­கள் அதி­க­மான ஈடு­பாட்­டைக் காட்­டு­வ­தில்லை. இதன்­பே­றா­கப் பெரும்­பான்­மை­யி­னர் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மிக­வும் எளி­தாக இடம்பி­டித்து அதிக வரம் பெறு­கி­றார்­கள். எம்மை ஒதுக்­கி­வி­டு­கி­றார்­கள்.

தென்­ப­கு­தி­யில் அவர்­க­ளுக்கு நாளாந்­தம் தூர­நோக்­கின் அவ­சி­யம் பற்றி விழிப்­பு­ணர்­வுக் கருத்­தா­டல்­கள் இடம்­பெ­று­கின்­றன. சம­யத் தலை­வர்­கள்­கூட நவீன உல­கில் மாண­வர்­கள் விஞ்­ஞான, கணி­தத் துறை­க­ளுக்­குச் செல்­லு­கின்ற பாதை­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்கு வழி­பு­ரி­கி­றார்­கள். மேலும் பல கல்­வி­மான்­கள் தத்­தம் மதத்­தின் ஊடாக தொழில் நுட்ப, புத்­தாக்க, ஆங்­கில, ஆராய்ச்சி முயற்­சி­க­ளுக்கு வித்­தி­டு­கி­றார்­கள்.

டாக்­டர்­கள் தொடக்­கம், கட்­டு­மா­னம் வரைக்­கும் தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­கின்ற அள­வுக்கு யாழ்ப்­பா­ணம் கணத்­துக்­குக் கணம் மாறிக்­கொண்டே செல்­கி­றது. நாமோ தமிழ், ஆங்­கி­லம், விஞ்­ஞான, கணித, வணிக, தொழில்­நுட்­பப் பாடங்­க­ளில் போது­மான முன்­னேற்­றம் அடை­ய­வில்லை.

குறிப்­பாக விஞ்­ஞான, கணித, தக­வல் தொழில் நுட்­பத் துறை­க­ளில் தமிழ் மாண­வர்­களை வளர்ப்­ப­தன் மூல­மா­கவே யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மாற்று ஆக்­கி­ர­மிப்பை வென்­றெ­டுக்க முடி­யும்.ஆனால் எம்­ம­வர்­கள் இது குறித்து அக்­கறை காட்­டிச் செயற்­ப­டு­வ­தா­கத் தோன்­ற­வில்லை. இந்த நிலை­யில் எப்­படி முன்­னேற்­றம் வரும்? தோற்­றே­விட்­டோம்; இனி­யா­வது மீள்­வோமா? விட்­டு­வி­டு ­வோமா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close