மைத்­தி­ரிக்கு ரணில் பதி­லடி!!

ஐக்­கிய தேசிய முன்­னணி அரசை எவ­ரா­லும் இனி­மேல் கவிழ்க்­கவே முடி­யாது. ‘2018 ஒக்­ரோ­பர் 26’ போல் அர­சி­யல் சூழ்ச்­சிக்கு மீண்­டும் எத்­த­னிப்­ப­வர்­கள் என்­ன­தான் ஆட்­டம் போட்­டா­லும் இறு­தி­யில் மூக்­கு­டை­ பட்டே போவார்­கள். எங்­கள் அரசு தலை­நி­மிர்ந்தே நிற்­கும். இந்த அரசு ஒரு­போ­தும் கவி­ழாது.

இவ்­வாறு திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார் ஐக்­கிய தேசிய கட்­சி­யின் தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க.
ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் இணைந்­துள்ள சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஒரு பகுதி உறுப்­பி­னர்­களை இணைத்து, 113 உறுப்­பி­னர்­க­ளின் பெரும்­பான்­மைப் பலத்­து­டன் எதிர்­வ­ரும் நவம்­பர் – டிசம்­பர் மாதங்­க­ளுக்­குள் நடை­பெ­ற­வுள்ள அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­ன­தாக, தற்­போ­தைய அர­சைக் கவிழ்ப்­ப­தற்­கான மற்­றொரு முயற்­சியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கொள்­ள­வுள்­ளார் என்று கொழும்பு ஆங்­கில ஊட­கம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் பன்­னாட்டு செய்­திச் சேவை ஒன்­றுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளார்.அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது-

ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சில் ஐக்­கிய தேசி­யக் கட்சி உள்­ளிட்ட பல பங்­கா­ளிக் கட்­சி­கள் உள்­ளன. அந்­தக் கட்­சி­க­ளின் உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் எனது தலை­மை­யில் கீழ் ஒற்­று­மை­யு­டன் ஓர­ணி­யில் செயற்­ப­டு­கின்­ற­னர். அதே­வேளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் எதி­ரணி வரி­சை­யில் அமர்ந்­து­கொண்­டா­லும் தமிழ் மக்­க­ளின் நலன் கருதி எமது அர­சுக்கு பூரண ஆத­ரவை வழங்கி வரு­கின்­றார்­கள்.

இந்த ஒற்­றுமை ‘2018 ஒக்­ரோ­பர் 26 அர­சி­யல் சூழ்ச்சி’ நடந்­தது முதல் தொடர்­கின்­றது. இத­னால்­தான் அந்த அர­சி­யல் சூழ்ச்­சியை வெறும் 51 நாள்­க­ளில் முறி­ய­டித்­தோம். இனி­மே­லும் அர­சி­யல் சூழ்ச்­சிக்கு இட­ம­ளிக்க மாட்­டோம். இந்த அரசை எவ­ரா­லும் கவிழ்க்­கவே முடி­யாது – என்­றார்.

You might also like