மைத்­தி­ரி­யும் தெரி­வுக்­குழு முன்­னி­லை­யில் சாட்­சி­யம்!

பாது­காப்பு அமைச்­சர் என்ற ரீதி­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் நாடா­ளு­மன்­றத் தெரி­வுக்­குழு முன்­னி­லை­யில் சாட்­சி­யம் வழங்க அழைக்­கப்­ப­ட­வுள்­ளார்.

இவ்­வாறு உயிர்த்த ஞாயிறு தின­மன்று இடம்­பெற்ற தாக்­கு­தல்­கள் தொடர்­பில் ஆரா­யும் நாடா­ளு­மன்­றத் தெரி­வுக்­கு­ழு­வின் உறுப்­பி­ன­ரும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யு­மான பீல்ட் மார்­ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்­ளார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-:

தலைமை அமைச்­சர், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் மற்­றும் சட்­டம், ஒழுங்­கு­கள் முன்­னாள் அமைச்­சர்­கள் ஆகி­யோ­ரைச் சாட்­சி­யம் வழங்க அழைக்க நாடா­ளு­மன்­றத் தெரி­வுக்­கு­ழு­வில் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. நாட்­டின் பாது­காப்பு அமைச்­சர் என்ற ரீதி­யில் அரச தலை­வ­ரை­யும் அழைப்­பது குறித்து ஆரா­யப்­ப­டு­கின்­றது – என்­றார்.

நாடா­ளு­மன்­றத் தெரி­வுக்­குழு முன்­னி­லை­யில் ஏற்­க­னவே சாட்­சி­யம் வழங்­கி­ய­வர்­க­ளில் பலர் அரச தலை­வர் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருந்­துள்­ள­னர். இந்­த­நி­லை­யில் அரச தலை­வ­ரைத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு அழைப்­பது தொடர்­பா­கப் பல கருத்­துக்­கள் வெளி­யாகி வரு­கின்­றன.

You might also like