மொய்ப்பணம் தர மறுத்த தந்தையை அடித்துக்கு கொன்ற மணமகன்!!

திருமணத்துக்கு வைக்கப்பட்ட மொய்ப்பணத் தகராறில் தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தமிழகம் அரியலூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனது மகனின் திருமணத்துக்கு வைக்கப்பட்ட மொய்ப்பணத்தை கைவசம் வைத்திருந்தார்.

தந்தையிடம் மொய் பணத்தைத் தருமாறு கேட்டு தகராற்றில் ஈடுபட்ட மணமகன் தந்தையைக் கட்டையால் தாக்கிக் கொன்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து திருமணத்தன்றே மணமகனைப் பொலிஸார் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like