யாரா­யி­னும் சட்­டத்தை -கையில் எடுப்­பது தவறே!

பழம்­பெ­ரும் சிவ­பூ­மி­யான திருக்­கே­தீச்­ச­ரத்­தில் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய அமை­தி­யின்மை ஆழ்ந்த கவ­லைக்­கும் கரி­ச­னைக்­கும் உரி­யது. பல்­வேறு தரப்­பி­ன­ர­தும் கூர்ந்த அவ­தா­னிப்­புக்­கும் உரி­ய­தா­கி­யுள்­ளது.

சிவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு அமைக்­கப்­பட்­டி­ருந்த அலங்­கார வளை­வைப் புதுப்­பிக்க எடுக்­கப்­பட்ட முயற்சி சில­ரால் தடுக்­கப்­பட்டு அலங்­கார வளைவு உடைத்து வீசப்­பட்­டுள்­ளது. கத்­தோ­லிக்க மக்­களே அத­னைச் செய்­த­னர் என்று மன்­னார் ஆயர் தொடர்­பில் குரல் தர­வல்ல அதி­காரி தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

கடந்த ஆண்டு அந்த வளைவு அதே இடத்­தில் தற்­கா­லி­க­மாக அமைக்­கப்­பட்­ட­போ­தும் அது பின்­னர் அகற்­றப்­ப­ட­வில்லை. இப்­போது சிமெந்­துக் கல­வை­யிட்டு உறு­தி­யான நிரந்­தர கட்­ட­மைப்பு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் சந்­தே­கம்­கொண்ட கத்­தோ­லிக்க மக்­கள் அதனை அங்­கி­ருந்து அகற்­றி­னர் என்று விளக்­க­மும் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது.

திருக்­கே­தீச்­ச­ரத்­தில் அமைந்­துள்ள மாந்தை லூர்து மாதா ஆல­யத்­தின் காணி தொடர்­பில் திருக்­கே­தீச்­சர ஆல­யத்­தின் நிர்­வா­கத்­தி­ன­ரு­டன் தேவா­ல­யத்­தி­ன­ருக்கு உள்ள காணிப் பிணக்­கின் பின்­ன­ணி­யும் இந்­தச் சம்­ப­வத்­தின் பின்­ன­ணிக் கார­ணங்­க­ளில் ஒன்­றா­கத் தெரி­கி­றது.

ஆலய நிர்­வா­கங்­க­ளுக்கு இடை­யி­லான இத்­த­கைய பிணக்கு பேசி தீர்க்­கப்­ப­ட­வேண்­டும். அல்­லது நீதி­மன்­றங்­க­ளின் ஊடா­கத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டும். லூர்து மாதா ஆல­யக் காணி தொடர்­பான பிணக்கு ஏற்­க­னவே நீதி­மன்­றத்­தின் விசா­ர­ணை­யில் உள்­ளது. அப்­ப­டி­யி­ருக்­கை­யில் சட்­டத்­தைத் தம் கையில் எடுத்­துக்­கொண்டு சிலர் செயற்­பட முற்­பட்­டி­ருப்­ப­ தை­யும் அதனை மன்­னார் மாறை­மா­வட்ட கத்­தோ­லிக்­கத் தலை­மைப்­பீ­டம் நியா­யப்­ப­டுத்த முற்­பட்­டி ­ருக்­கின்­ற­மை­யும் நெரு­ட­லா­ன­வை­யாக அமைந்­துள்­ளன.

எந்த நிலை­யி­லும் எந்­தக் கார­ணங்­க­ளுக்­கா­க­வும் யாரும் சட்­டத்­தைத் தமது கைக­ளில் எடுத்­துக்­கொள்­வதை ஏற்­றுக்­கொள்ளமுடி­யாது. சட்­டத்­துக்­குப் புறம்­பாக சிவ­ராத்­திரி வளைவு அமைக்­கப்­பட்­டது எனில் அது குறித்து முறை­யி­டு­வ­தற்­கும் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட நியம முறை­கள் இருக்­கின்­றன. அவையே பின்­பற்­றப்­பட்­டி­ ருக்­க­ வேண்­டும். இரு ஆலய நிர்­வா­கங்­க­ளுக்கு இடை­யில் தீர்த்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்­டிய ஒரு விட­யம் சமய மயப்­ப­டுத்­தப்­பட்டு வன்­செ­யல் வரைக்­கும் வளர்த்­துச் செல்­லப்­பட்­டி­ருக்­கத் தேவை இல்லை. அப்­படி நடந்­தி­ருப்­பது கடு­மை­யா­கக் கண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­தும்­கூட.

இந்­தச் சம்­ப­வத்­திற்கு இரு தரப்­பி­ன­ரும் ஒரு­வர் மீது ஒரு­வர் மாறி மாறி குற்­றச்­சாட்­டுக்­க­ளைத் தெரி­வித்­து­வ­ரும் நிலை­யில், நிலமை தெளி­வா­க­வும் நிதா­ன­மா­க­வும் அணு­கப்­ப­ட­வேண்­டி­யது மிக முக்­கி­யம். மதங்­க­ளுக்கு இடை­யில் பிணக்கை உரு­வாக்­கும் வகை­யில் இந்த விட­யம் கையா­ளப்­ப­டக்­கூ­டாது என்­ப­தில் அனைத்­துத் தரப்­பி­ன­ரும் அக்­க­றை­யோடு செயற்­ப­ட­வேண்­டி­ய­தும் அவ­சி­யம்.

மதங்­க­ளின் அடிப்­ப­டையே அன்­பும் சகிப்­புத்­தன்­மை­யும்­தான். எல்லா மதங்­க­ளும் இவற்­றையே போதிக்­கின்­றன. மதத் தலை­வர்­க­ளும் பக்­தர்­க­ளும் இவற்­றில் பற்­று­று­தி­யோடு இருப்­ப­தும் செயற்­ப­டு­வ­தும் அவ­சி­யம். சிக்­கல்­க­ளை­யும் பிணக்­கு­க­ளை­யும் சரி­யான முறை­யில் முறை­யாக அணு­கித் தீர்ப்­ப­தற்­கும் பதற்­றத்­தைத் தணிப்­ப­தற்­கும் நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சி­யம்.

You might also like