யாழ்ப்­பா­ணத்­தி­லும் கண்­டிய வாசனை

முதன்மை வீதி­களை இணைக்­கும் ஒரு குறுக்கு வீதி­யில் பய­ணிக்­கும் போது, சில காட்­சி­கள் எம்மை இரம்­மி­ய­மாக்­கிச் சிந்­திக்­க­வும் சந்­திக்­க­வும் சாதிக்­க­வும் தூண்­டு­கின்­றன.

ஒரு பெரிய மகான், யாழ்ப்­பா­ணத்­தின் கல்வி வளர்ச்­சிக்­காய் தனது உடல் பொருள் ஆவியை முழு­மை­யாக அர்ப்­ப­ணித்து, இப்­பூ­வு­ல­கம் உள்­வரை கோபு­ர­மாய்ப் பயன்­ப­டு­மாறு ஒவ்­வொரு அங்­குல அங்­கு­ல­மாய் ‘ஓம் நம­சி­வாய சிவாய நம’ என்று உச்­ச­ரித்து எல்­லாம் வல்ல பர­மேஸ்­வ­ரப் பெரு­மானை வாயார வாழ்த்தி, வணங்கி, பணிந்து அழைத்து வந்து குடி­ய­மர வைத்த பாங்­கான இடந்­தான் அந்­தப் பென்­னாம்­பெ­ரிய ஆல­ய­மா­கும்.

இலங்­கை­யையே உள்­வாங்­கும், ஒரு இந்து பாரம்­ப­ரிய சாம்­ராஜ்­ஜி­யத்­தின் வாயி­லில், கண்­டிய பாரம்­ப­ரிய கட்­டு­மா­ன­மா­னது வளர்ந்து பிர­வா­கிப்­பது படி­யாத பாம­ர­னா­கிய எனக்கு நன்­றா­கவே புலப்­ப­டு­கி­றது. யாழ்ப்­பாண வாசனை சட்­டென்று புரிய வேண்­டாமா? படி­யா­த­வர்­க­ளுக்கே இது புரி­கி­றது! யாருமே இது­பற்­றிக் கவ­லைப்­ப­டா­ம­லி­ருப்­ப­து­தான் வேடிக்கை. கவலை வருமா?

கரு­டன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close