யாழ்ப்­பாண நீதி­மன்றச் சூழ­லில் -இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­கள் மனு­தா­ர­ருக்கு அச்­சு­றுத்­தலா?

ஆள்­கொ­ணர்வு மனுத் தாக்­கல் செய்­துள்ள மனு­தா­ரர்­களை அச்­சு­றுத்­தும் வகை­யில் இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வி­னர் செயற்­பட்­ட­னர் என்று மனு­தா­ரர்­கள் குற்­றஞ்­சாட்டி முறை­யி­டு­கின்­ற­னர் என்று மனு­தா­ரர்­க­ளது சட்­டத்­த­ர­ணி­கள் தெரி­வித்­த­னர்.

நாவற்­குழி பகு­தி­யில் அமைந்­தி­ருந்த இரா­ணுவ முகாம் அதி­கா­ரி­யால் 24 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­டுப் பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டுத் தொடர்­பி­லான ஆட்­கொ­ணர்வு மனு மீதான விசா­ரணை யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் நீதி­பதி மா. இளஞ்­செ­ழி­யன் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது.

மனு­தா­ரர்­கள் மேல் நீதி­மன்­றில் இருந்­த­போது நீதி­மன்ற சூழ­லில் பெரு­ம­ள­வான இரா­ணுவ புல­னாய்வு பிரி­வி­னர் பிர­சன்­ன­மாகி இருந்­த­னர். வழக்கு விசா­ர­ணை­கள் முடி­வ­டைந்த பின்­னர் நீதி­மன்­றுக்கு வெளி­யில் வந்­த­போது புல­னாய்­வா­ளர்­கள் அச்­சு­றுத்­தும் வகை­யில் நடந்து கொண்­டுள்­ள­னர் என்று மனு­தா­ரர்­கள் குற்­றஞ்­சாட்­டி­னர் என்று மனு­தா­ரர்­க­ளது சட்­டத்­த­ர­ணி­கள் தெரி­வித்­த­னர்.

இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­கள் நீதி­மன்ற வளா­கத்­தை­விட்டு வெளி­யேறி, யாழ்ப்­பாண பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு அரு­கில் நிறுத்தி வைக்­கப்­பட்டு இருந்த இரா­ணு­வத்­தி­ன­ருக்கு சொந்­த­மான வாக­னத்­தில் ஏறி சென்­ற­னர். அதன் பின்­னரே தாம் நீதி­மன்­றை­விட்டு வெளி­யே­றி­னோம் என்­றும் மனு­தா­ரர்­க­ளும் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளும் தெரி­வித்­த­னர் என்று சட்­டத்­த­ர­ணி­கள் தெரி­வித்­த­னர்.

மனு­தார்­க­ளி­டம் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கருத்து கேட்க முற்­பட்­ட­போது, “அச்­சம் கார­ண­மாக தாம் கருத்­துக் கூற விரும்­ப­வில்லை” என்று கூறி சென்­ற­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close