யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட- 17 கிலோ கஞ்சா!!

கஞ்சா கைமாற்றும் நடவடிக்கையின்போது வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 37 வயது சந்தேக நபரையும்,அவரிடமிருந்து 17 கிலோ 560 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாகப் யாழ்ப்பாண மாவட்டப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிரதேச பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டனர்.

யாழ்ப்பாணம் செம்மணி வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 17 கிலோ 560 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் வடமராட்சி கிழக்கிலிருந்து விற்பனைக்காக கஞ்சாவைக் கொண்டு வந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You might also like