ரணி­லின் சுய­ரூ­பம் அம்­ப­ல­மா­கி­விட்­டது!!

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தாமும் ஒரு சாதா­ரண தென்­னி­லங்கை அர­சி­யல்­வாதி என்­பதை நிரூ­பித்­துக் காட்­டி­விட்­டார்.
கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அதன் பேச்­சா­ள­ரு­மான சுமந்­தி­ர­னின் நாடா­ளு­மன்ற உரைக்­குப் பதி­ல­ளிக்­கும் வித­மாக அவர் வெளி­யிட்ட அறிக்கை இதை தெட்­டத் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­விட்­டது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பாக ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. இது தொடர்­பாக கருத்து வெளி­யிட்­ட­போதே ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் உண்­மை­யான உள்­ளக்­கி­டக்கை அம்­ப­ல­மா­னது. எவர் எதைச் சொன்­னா­லும் போர்க்­குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­களை விசா­ரிப்­ப­ தற்­கெ­னக் கலப்பு நீதி­மன்­றம் அமைப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தென அவர் கூறி­ய­தன் மூல­மாக நீதி­யான விசா­ர­ணை­யொன்று இடம்­பெ­று­வதை அவர் ஏற்­க­மாட்­டா­ரென்­பது தெளி­வா­கத் தெரி­கின்­றது.

நியா­ய­மான விசா­ரணை இல்லை
போர்க் குற்­றங்­க­ளில் படை­யி­னர் ஈடு­ப­டாது­ விட்­டால் நீதி­யான விசா­ர­ ணை­ யைத் துணி­வு­டன் எதிர்­கொள்ள முடி­யும். ஆனால் இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் அத்­த­கைய விசா­ரணை இடம்­பெ­று­வ­தைத் தெற்­கில் எவ­ருமே விரும்­ப­வில்­லை­யென்­பது தெளி­வா­கத் தெரி­கி­றது. இதில் தலைமை அமைச்­ச­ரும் தம்மை இணைத்­துக்­ கொண்­டுள்­ளார். ஏற்­க­னவே இறு­திப் போரின்­போது படை­யி­னர் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­பட்­டதை ஏற்­றுக்­கொண்­ட­வர்­தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. ஆனால் நியா­ய­மான விசா­ணை­கள் இடம்­பெ­று­வதை அவர் ஏற்க முடி­யா­தெ­னக் கூறி­யதை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

பிரிட்­டன் தலை­மை­யில் இலங்கை மீது கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னம் மிக­வும் காத்­தி­ர­மா­னது. இதை மதித்து நடக்க வேண்­டிய கடப்­பா­டும் கட்­டா­ய­மும் இலங்­கைக்கு உள்­ளது. ஆனால் இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­தன் மூல­மா­கத் தீர்­மா­னத்தை நாம் ஏற்­றுக்­கொள்­வ­தாக அர்த்­தம் கொள்­ளக்­கூ­டா­தென ரணில் சிறு­பிள்­ளைத்­த­ன­மா­கக் கருத்து வெளி­யிட்­ட­மை­தான் சிறு ­பிள்­ளைத் தன­மா­னது.

பாதிப்பு
நாட்­டின் இறை­யாண் மை­யைப் பாதிக்­காத வகை­யில் தீர்­மா­ னத்­தில் உள்­ள­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தப் போவ­தாக அவர் கூறி­யி­ருப்­ப­தும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தல்ல. இலங்கை இனி­யும் தமது வச­திக்கு ஏற்­ற­வ­கை­யில் நடந்­து­கொள்ள முடி­யாது என்­பதை அவர் புரிந்­து­ கொள்ள வேண்­டும். தமி­ழர்­க­ளின் உரி­மை­கள் பறிக்­கப்­பட்­ட­போதே நாட்­டின் இறை­யாண்மை பாதிக்­கப்­பட்­டு­விட்­ட­தை­யும் அவர் புரிந்­து­கொள்­ள­வேண்­டும். கூட்­ட­மைப்­பி­ன­ ருக்கு அறி­வுரை வழங்­கு­வ­தற்­கும் அவர் தயங்­க­வில்லை. இந்த நாட்­டின் அர­ச­மைப்­பைக் கூட்­ட­மைப்­பி­னர் மதித்து நடக்­க­வேண்­டு­மெ­ன­வும் அவர் கூறி­யுள்­ளார்.
இந்த அர­ச­மைப்பு இருக்­கும்­வ­ரை­யில் படை­யி­னரை பன்­னாட்டு நீதி­மன்­றம் அல்­லது பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தின் ஊடா­கத் தண்­டிக்க முடி­யா­தென அவர் கூறி­யதை ஏற்க உல­கி­லுள்ள ஒவ்­வொரு நாடும் தத்­த­மக்­கென ஓர் அர­ச­மைப்­பைக் கொண்­டுள்­ளன. இந்த நிலை­யில் அந்த நாடு­கள் தமது அர­ச­மைப்பை ஒரு கேட­ய­மா­கப் பயன்­ப­டுத்தி குற்­றச் செயல்­க­ளி­லி­ருந்து தப்­பித்­துக் கொள்ள முடி­யாது. இலங்­கைக்­கும் அது பொருந்­தும்.

போருக்கு கார­ணம்
பழை­ய­வற்­றைக் கிள­றி­னால் வன்­முறை வெடிக்­கு­மென அவர் கூறி­யதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. பழைய சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எது­வும் எடுக்­காது மூடி மறைத்­த­தன் விளை­வா­கவே இந்த நாட்­டில் கொடி போர் ஒன்று இடம்­பெற்­ற­தை­யும் இனப்­பி­ரச்­சினை தீவி­ர­மாக உரு­வெ­டுத்து நிற்­ப­தை­யும் தலைமை அமைச்­சர் மறந்­த­தன் கார­ணம் புரி­ய­வில்லை. ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யின் ஆட்­சிக் காலத்­தில் 1983இல் இடம்­பெற்ற இனக் கல­வ­ரத்தை தமி­ழர்­கள் என்­றுமே மறக்­க­மாட்­டார்­கள். எவ்­வாறு முடி­யுமோ அந்­த­ள­வுக்­குத் தமிழ்­மக்­கள் கொடூ­ர­மா­கக் கொலை செய்­யப்­பட்­ட­னர். வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­ யில் இடம்­பெற்ற குரூ­ர­மான கொலை­கள் அழிக்க முடி­யாத சாட்­சி­யங்­க­ளாக இன்­று­முள்­ளன. இவை ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­குச் சாதா­ரண விட­யங்­க­ளாக இருக்­க­லாம். ஆனால் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் என்­றுமே மறக்க முடி­யா­தவை.

இதைப் போன்­று­தான் இறு­திப் போரின்­போது தமி­ழர்­க­ளுக்கு நேர்ந்த அவ­லங்­களை எளி­தில் மறக்க முடி­யுமா? போர்க் குற்­றங்­க­ள­ தும் மனித உரிமை மீறல்­க­ளா­லும் பாதிக்­கப்­பட்ட ஆயி­ர­மா­யி­ரம் தமி­ழர்­கள் இன்­றும் அவற்­றின் தாக்­கத்­தி­லி­ருந்து மீள­மு­டி­யாத நிலை­யில் உள்­ள­னர். இவர்­க­ளுக்கு நீதி கிடைக்­க­ வேண்­டு­மென்­றால் இவற்­றைப் புரிந்த குற்­ற­வா­ளி­க­ளுக்கு உரிய தண்­டணை வழங்­கப்­ப­ட­வேண்­டும். இதற்­குக் கலப்பு நீதி­மன்­றங்­க­ளால் விசா­ர­ணை­கள் இடம்­பெற்று உரிய தண்­ட­னை­கள் வழங்­கப்­ப­டல் வேண்­டும். உள்­நாட்டு நீதிப் பொறி­மு­றை­க­ளால் இவை சாத்­தி­யப்­ப­டு­மென எதிர்­பார்க்க முடி­யாது. இதே­வேளை சில படை­ய­தி­கா­ரி­கள் மேற்­கொண்ட சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளுக்­கான ஆதா­ரங்­கள் தம்­மி­டம் உள்­ள­தாக முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யான சரத்­பொன்­சேகா கூறி­யுள்­ளமை கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது. தேர்­தல்­கள் நெருங்­கி­வ­ரும் வேளை­யில் தமது உண்­மை­யான முகத்தை வெளிக்­காட்டி விட்­டார் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. இதை கூட்­ட­மைப்பு புரிந்­து­கொள்ள வேண்­டும்.

You might also like