ரணில் எடுத்த அதி­ரடி முடிவு!!

கூட்டு அரசு அமைப்­ப­தற்­கு­ரிய எந்த நட­வ­டிக்­கை­யும் இனி மேல் எடுப்­ப­தில்லை என்று ஐக்­கிய தேசி­யக் கட்சி தீர்­மா­னித்துள்­ளது
கடந்த ஒக்­ரோ­பர் மாதம் ஏற்­பட்ட அர­சி­யல் குழப்­பதை அடுத்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி கூட்டு அர­சில் இருந்து வெளி­யே­றி­யது.

அதன்­பின்­னர் ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்சி அமைத்­தது. எனி­னும் மீண்­டும் கூட்டு அரசு அமைக்­கும் முயற்­சி­களை ஐக்­
கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கொண்­டி­ருந்­தார்.

இது தொடர்­பாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் அனு­மதி கோரி­யி­ருந்­தார். எனி­னும் அரச தலை­வர் பக்­கம் இருந்து சாத­க­மான பதில் எது­வும் கிடைக்­க­வில்லை.

இந்­த­நி­லை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள் பிளவை ஏற்­ப­டுத்த அரச தலை­வர் தரப்­பில் இருந்து நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்று சந்­தே­கிக்­கும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இனி­மேல் கூட்டு அரசை அமைக்­கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தில்லை என்று தீர்­மா­னித்­துள்­ளார்.

அரச தலை­வர் தேர்­த­லுக்­குச் சிறிது காலமே உள்­ள­தால் அது­வரை பொறுமை காப்­பது என்­றும் அவர் தீர்­மா­னித்­துள்­ளார். கூட்டு அரசு அமைப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அழைப்பு விடுத்­தால் மட்­டுமே இனி அதைப் பற்­றிப் பரி­சீ­லிப்­பது என்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தீர்­மா­னித்­துள்­ளார்.

தனது இந்த முடி­வைக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளு­டன் பகிர்ந்­துள்ள ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அரச தலை­வர் தேர்­த­லுக்­கும் தய­ரா­கு­மா­றும் அவர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

You might also like