வட­ம­ராட்சி இளை­ஞன் கொலை -பொலி­ஸா­ருக்­குப் பிணை!!

வட­ம­ராட்சி கிழக்­கில் இளை­ஞர் ஒரு­வ­ரைச் சுட்­டுக்­கொன்ற வழக்­கி­லுள்ள பொலி­ஸார் இரு­வ­ருக்­கும் நேற்­றுப் பிணை விடு­விக்­கப்­பட்­டது. சுமார் 5 மாதங்­க­ளின் பின்­னர் பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது.

அவர்­கள் சார்­பில் யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­பட்ட மனுக்­கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு வந்த நிலை­யில் நேற்று 4 ஆவது தட­வை­யா­க­வும் அந்த மனுக்­கள் இது எடுத்­துக் கொள்­ளப்­பட்டு பிணை வழங்­கப்­பட்­டது.

அதன்­படி இரு­வ­ரும் தல 25 ஆயி­ரம் ரூபா ரொக்­கப் பிணை­யி­லும் தலா 2 லட்­சம் ரூபா ஆள்­பி­ணை­யி­லும் விடு­விக்­கப்­பட்­ட­னர். இரு­வ­ரும் தமது ஆள் அடை­யாள அட்டை உள்­ளிட்ட ஆவ­ணங்­களை நீதி­மன்­றில் சமர்ப்­பிக்க வேண்­டும் என்­றும் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லக்­கூ­டாது என்­பது உள்­ளிட்ட நிபந்­த­னை­க­ளும் விதிக்­கப்­பட்­டன.

கடந்த ஜூலை மாதம் இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றி­ருந்­தது. நெல்­லி­யடி துன்­னா­லை­யைச் சேர்ந்த யோக­ராசா தினேஸ் (வயது – 25) என்­ப­வர் கொல்­லப்­பட்­டார்.
சட்­டத்­துக்­குப் புறம்­பாக மணல் ஏற்­றிச் சென்ற கன்­ரர் வாக­னத்­தின் மீது நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் அவர கொல்­லப்­பட்­டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

துப்­பாக்­கிச் சூடு நடத்­திய குற்­றச்­சாட்­டில் உப­பொ­லிஸ் பரி­சோ­த­கர் சஞ்­சீ­வன், பொலிஸ் கொன்ஸ்­ட­பிள் முபா­ரக் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்டு சுமார் 5 மாதங்­க­ளாக விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். இந்த நிலை­யில் யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் நேற்­றுப் பிணை வழங்­கி­னார்.

You might also like