வடக்கில் உறுதியற்றதான- அதிகாரத்தால் ஏமாற்றமே!!

மாகா­ணங்­க­ளில் ஆளு ­நர்­க­ளின் ஆட்­சியை ஏற்க முடி­யா­தெ­னக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் கூறி­யுள்­ளமை கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது. மாகாண சபை­க­ளின் ஆயுட்­கா­லம் நிறை­வ­டைந்­த­மை­யால் வடக்கு மற்­றும் கிழக்கு உட்­பட நாட்­டின் ஏனைய மாகா­ணங்­க­ளில் ஆளு­நர்­க­ளின் ஆட்சி இடம்­பெற்று வரு­கின்­றது. இதை­வி­டுத்து வடக்­கி­லும், கிழக்­கி­லும் மாகாண சபைத் தேர்­தல்­களை உட­ன­டி­யாக நடத்­து­மா­றும் அவர் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

அர­ச­த­லை­வ­ரி­னது அதி­கா­ரமே
ஆளு­நர் நிய­ம­னத்­தில் உண்டு
தமது அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி அரச தலை­வரே சகல மாகா­ணங்­க­ளுக்­கும் ஆளு­நர்­களை நிய­ம­னம் செய்­தார். இந்த வகை­யில் கிழக்கு மாகா­ணத்­துக்கு ஹிஸ்­புல்­லா­வும் வடக்கு மாகா­ணத்­துக்கு சுரேன் ராக­வ­னும் நிய­மிக்­கப்­பட்­ட­னர். ஹிஸ்­புல்­லா­வின் நிய­ன­மத்­துக்கு எதி­ராக கிழக்­குத் தமி­ழர்­கள் பெரும் ஆர்ப்­பாட்­டங்­க­ளில் ஈடு­பட்­ட­னர். ஓர் அர­சி­யல்­வா­தியை மூவின மக்­க­ளும் வாழ்­கின்­ற­தொரு பிர­தே­சத்­துக்கு ஆளு­ந­ராக நிய­மித்­தமை தவ­றெ­ன­வும் அவர்­கள் வாதிட்­ட­னர். மேலும் ஹிஸ்­புல்லா தமி­ழர்­க­ளுக்கு விரோ­த­மான சிந்­த­னை­யைக் கொண்­ட­வர் என்­ப­தால் தமக்கு அவ­ரால் பாதிப்பு ஏற்­ப­டு­மெ­ன­வும் தமி­ழர்­கள் சுட்­டிக்­காட்­டி­னர். ஆனால் அரச தலை­வர் இவற்­றை­யெல்­லாம் காதில் போட்­டுக்­கொள்­ள­வில்லை.

ஏற்­க­னவே கல்­முனை வடக்கு தமிழ்ப் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு முஸ்­லிம் காங்­கி­ர­சைப் பிர­தி­நி­நித்­து­வம் செய்­யும் இரா­ஜாங்க அமைச்­ச­ரான ஹரீஸ் முட்­டுக்­கட்டை போட்டு வரு­கின்­றார். இத­னால் கல்­முனை வடக்­கில் வசிக்­கின்ற தமிழ்­மக்­கள் தமது அன்­றாட அரச நிர்­வா­கச் செயற்­பா­டு­களை நிறை­ வேற்­று­வ­தில் பெரும் இடர்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். இதன் கார­ண­மா­கவே அர­சுக்கு ஆத­ரவு வழங்­கு­வது தொடர்­பா­கக் கிழக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தாம் தனித்து முடி­வெ­டுக்­க­ வுள்­ள­தாக அர­சுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

வடக்கு மாகாண ஆளு­நர்
அர­ச­த­லை­வ­ரின் விசு­வாசி
வடக்கு ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வர் வடக்­குத் தமி­ழர்­க­ளால் அவ்­வ­ளவு அறி­யப்­ப­டாத ஒரு­வ­ரா­வார். அவர் அர­சின் மீதும், அரச தலை­வர் மீதும் முழுமையான விசு­வா­சம் கொண்­டி­ருப்­ப­தால் பிரச்­சி­னைக்­கு­ரிய பகு­தி­யா­கிய வடக்­குக்கு அவர் நிய­மிக்­கப்­பட்­டார். ஆனால் அவ­ரது சமீ­ப­கால நட­வ­டிக்­கை­கள் வடக்­குத் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் திருப்தி­ய­ளிப்­ப­தா­கக் காணப்­ப­ட­வில்லை.

அவர் முற்று முழு­தா­கத் தமிழ் மக்­க­ளுக்­குச் சார்­பாக நடந்­து­கொள்­ள­வேண்­டு­மென எவ­ருமே எதிர்­பார்க்­க­வில்லை. வடக்­கில் இடம்­பெ­று­கின்ற சட்­ட­வி­ரோ­தச் செயற்­பா­டு­களை அவர் உட­ன­டி­யா­கத் தடுத்து நிறுத்த வேண்­டு­மெ­னவே இங்­குள்ள மக்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். வவு­னியா வடக்­கில் பெரு­ம­ளவு காடு­கள் அழிக்­கப்­பட்டு பெரி­ய­ள­வி­லாள சிங்­க­ளக் குடி­ யேற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­று­வ­தாக முன்­னர் அறி­விக்­கப்­பட்­டது. பின்­னர் அது தொடர்­பான செய்­தி­கள் வெளி­ வ­ராத நிலை­யில் தற்­போது அந்த நட­வ­டிக்கை இர­க­சி­ய­மா­கப் பெரு­ம­ள­வில் இடம்­பெ­று­வ­தா­கப் பிர­தேச மக்­கள் கூறு­கின்­ற­னர். வவு­னியா வடக்­கில் அமைந்­துள்ள தமிழ்க் கிரா­மங்­க­ளான ஊற்­றுக்­கு­ளம் மற்­றும் கச்­சல் சம­ளங்­கு­ளம் ஆகி­ய­ன­வற்­றுக்கு இடை­யில் சிங்­க­ள­வர்­க­ளைக் குடி­ய­மர்த்­தும் முயற்­சி­களே தீவி­ர­மாக இடம்­பெ­று­வ­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.

ஒரு நாட்­டின் மூன்­றி­லொரு பகுதி காடாக இருக்க வேண்­டு­மென்­பது பொது­வான இயற்கை நிய­தி­யா­கும். சமீ­பத்­தில் கருத்து வெளி­யிட்ட அரச தலை­வர் நாட்­டில் காடு­கள் மோச­மாக அழிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் 33 சத­வீத அள­வில் இருக்க வேண்­டிய காடு­கள் 23 சத­வீ­தமே உள்­ள­தா­க­வும் கூறி­னார். மேலும் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரன் காடு­களை அழி­ய­வி­டாது பாது­காத்­த­தா­க­வும் அவர் புக­ழா­ரம் சூட்­டி­னார். தற்­போது ஓர் இனத்­தின் பிர­தே­சத்­தில் இன்­னொரு இனத்­தைக் குடி­ய­மர்த்­து­வ­தற்­கா­கப் பெரு­ம­ளவு காடு­கள் அழிக்­கப்­ப­டு­வதை அரச தலை­வர் மௌன­மா­கவே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார். இந்­தச் சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பாடு தொடர்­பாக வடக்கு ஆளு­ந­ரும் மௌனம் காத்து வரு­கின்­றார். ஒரு தமி­ழர் என்ற வகை­யி­லா­வது தமிழ்­மக்­க­ளுக்கு இன்­னல் ஏற்­ப­டும்­போது அதைத் துடைக்க வேண்­டிய பெரும் பொறுப்பு அவ­ருக்கு உள்­ளது. ஆனால் வடக்­கின் முத­லா­வது பௌத்த மாநாட்­டுக்­குத் தலைமை தாங்­கு­வ­தி­லேயே அவர் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளார்.

மாகாண சபை முறைமை
தேவை­யற்­ற­தொன்­று­தான்
இலங்­கை­யைப் போன்­ற­தொரு சிறிய நாட்­டில் மாகா­ண­சபை முறைமை தேவை­யற்­ற­தொன்­றா­கும். இதற்­குச் செல­வி­டு­கின்ற நிதியை மக்­க­ளின் ஏனைய தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­து­வ­தால் பிர­யோ­ச­ன­மாக இருக்­கும். வடக்கு மாகா­ண­சபை தனது முழுக் கால­மும் ஆட்­சி­யில் இருந்­த­போ­தி­லும் அத­னால் மக்­க­ளுக்கு எவ்­வித பய­னும் கிடைக்­க­வில்லை. மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் தமக்­கு­ரிய அனைத்து வரப்­பி­ர­சா­தங்­க­ளை­யும் ஒன்­று­கூ­ட­வி­டா­மல் அனு­ப­வித்­த­னர். சபைக் கூட்­டங்­க­ளுக்கு அதி­க­நிதி செல­வி­டப்­பட்­டது.

கட்­டங்­க­ளுக்­குக்­கான வாடகை, வாக­னங்­க­ளுக்­கான செல­வி­ன­மென வெள்ளை யானை­யைக் காட்­டில் பரா­ம­ரிக்­கின்ற அவ­ல­நி­லை­தான் இங்கு காணப்­பட்­டது. ஆனால் மாகா­ண­ச­பை­யால் எள்­ள­ளவு பிர­யோ­ச­னம்­கூட மக்­க­ளுக்­குக் கிடைக்­க­வில்லை. மாகா­ண­சபை போய் ஆளு­நர் நிர்­வா­கம் வந்­தால் எல்­லாமே சரி­யா­கி­வி­டு­மென மக்­கள் நம்­பி­யி­ருந்­த­னர். ஆனால் ஏமாற்­றமே எஞ்­சி­யது.

You might also like