வன்முறைகளைக் கட்டுப்படுத்த- ராணுவத்துக்கு அதி உச்ச அதிகாரம்!!

வன்முறைகளில் ஈடுபடுவேரைக் கட்டுப்படுத்த இராணுவம் அதி உச்ச அதிகாரங்களைப் பயன்படுத்தும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித் தார்.

வடமேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து அவர் விடுத்துள்ள சிறப்பு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சில குழுக்களை அடையாளம் கண்டுள்ளோம். இவ்வாறானவர்கள் நேற்றிரவு (நேற்றுமுன்தினம்) சிலாபத்தில் ஆரம்பித்த வன்முறைகளைப் பல்வேறு பகுதியில் அரங்கேற்றியுள்ளனர்.

இராணுவத்தினர் அந்தப் பகுதியில் முழுமையான அமைதியை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறானவர்களின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் அதிகாரத்‍தை பயன்படுத்துகின்றனர், தேவை ஏற்படின் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து அதிகபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

You might also like