வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் களத்தில்!!

நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படும் என்று விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.

வன்முறைகள் தொடர்பாகத் தகவல்கள் கிடைத்ததும், அந்தப் பிரதேசங்களுக்கு உடனடியாக ஹெலிகொப்டர்களை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாரே பதியவும், ஹெலி மூலம் துருப்புக்களை இறக்கி நிலமையைக் கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

You might also like